பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல தாவனுர் வரலாறு 411

என்பது நன்கு புலளும். நந்தி திருவருள் பெற்ற நான் மறையோகியராய் இருந்த இவர்தம் முன்னே நிலையில் இவர் பிறந்த ஊர் குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்கேற்ற வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் அடிகள், சிவயோகியார் திருமூலராதற்கு முன்னுள்ள அவர் தம் ஊர் பேர் குலம் முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூருது விட்டார். -

திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்தி யெம்பெருமான்பால் ஞான நூற்பொருள்களை ஒதியுணர்ந்த நான்மறையோகிகளுள் ஒருவர் என்பது,

நந்தியருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வச் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னுேடெண்மரு மாமே ! (திருமந்திரம்-67)

எனவரும் அவர்தம் வாய்மொழியால் அறியப்படும். நந்தியருள் பெற்ற சிவயோகியார் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர் என்பதும், ஆவுறுதுயரத்தினை நீக்குதற் பொருட்டே இறைவன் அருளின்வழி மூலன் என்னும் ஆயனது உடம்பிற்புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தமது பழைய உடம்பினை வைத்த இடத்தில் வந்து பார்த்தபொழுது, அவ்வுடம்பினை இறைவன் மறைத்தருளினுளுக, அவ்வுடம்பினைக் காணுத வராய், முன்னையுடம்பினுற் பயனில்லையெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலனுடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித்தங்கியிருந்தனர் என்பதும்,

அரிய தெனக்கில்லை யட்டமாசித்தி

பெரிதருள்செய்து பிறப்பறுத்தானே : (திருமந்திரம்-4ே1)

எனவும்,

குரவன் அருளிற் குறிவழி மூலன்

பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்

தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேதெட்டாஞ் சித்தியே. (642)

எனவும்,