பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள்

வேறிடத்தில் அமரச்செய்து தனித்து ஒருபால் அமர்ந்த வாதவூரடிகள், புத்தர்களை வினவி அவர்களுடைய சமயக் கொள்கைகளை அளவை நூல் முறைகளால் மறுத்துச் சைவசமயமே மெய்ச்சமயமென நிலைநாட்டினர். புத்தர் களுடன் அடிகள் நிகழ்த்திய வாதத்தில் புத்தர்கள் தோல்வி யுற்றனர். புத்த சமயத்தில் ஈடுபாடுடையணுகிய சோழ மன்னன், இச்செய்தியையறிந்து ஊமையாகிய மகளையும் உடனழைத்துக்கொண்டு தில்லையையடைந்தான். என் மகளது ஊமையினைத் தீர்த்தோர் யாவரோ அவரே இவ் வாதத்தில் வெற்றிபெற்றவராவர் எனக்கூறிஞன். அது கேட்டுப் புத்தர்கள் தங்கள் வழிபடு தெய்வமாகிய புத்த தேவரை நினைந்து மணி மந்திரம் மருந்து என்னும் மூன்றி குலும் அப்பெண்ணினது ஊமையைப்போக்க முயன்றும் அந்நோய் தீர்ந்திலது. அஃதுணர்ந்த சோழ மன்னன் திருவாதவூரடிகள் திருமுன் தன் மகளைக் கொணர்ந்து நிறுத்தி ' என் மகளாகிய இவளது ஊமையினைத் தீர்த்தல் வேண்டும் எனத் தனது குறையினைத் தெரிவித்துக்கொண் டான். அவனது வேண்டுகோளுக்கு இணங்கிய அடிகள், தில்லைச் சிற்றம்பலவன் திருவடிகளைச் சிந்தித்து அவ்வூமைப் பெண்ணை அருட்பார்வையால் நோக்கிச் சிவபெருமானது பொருள் சேர்புகழினைத் தனித்தனி விளுவுரையாகப் பாடி வினவ, அவள் ஊமை நீங்கி, அடிகள் வினவிய விளுக்களுக் கெல்லாம் சிறிதும் தயங்காது தக்கவாறு விடைபகர்ந்தாள். அது கண்டு வியப்புற்ற சோழ மன்னன், சிவபெருமானே முழுமுதற் கடவுள் எனத் தெளிவாக உணர்ந்துகொண் டான்; இறைவனருள் பெற்ற மாணிக்கவாசகர் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சித் தில்லை மூவாயிரவரைப் பணிந்து முன்பு அவர்கள் சொன்ன வண்ணமே புத்தர்களைத் தண்டித்துத் தில்லைச் சிற்றம்பலவன் அருட்கூத்தினைக் கண்டு போற்றிச் சைவளுஞன்.

சிவனருள் விளக்க வந்த திருவாதவூரடிகள், தில்லைப் பதியிலே தங்கி மணிமன்றுள் நடம்புரியும் பெருமானை வழிபட்டு மாணிக்கமணிபோலும் வாசகப் பாமாலையைப் பாடிப் போற்றித் தில்லையம்பலவன் திருவடிக்கீழ் ஈறிலா ஞானனந்தப் பேரொளியிற் கலந்து இன் புற்ருர் எனப் பரஞ்சோதி முனிவர் தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.