பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

钨盘爱 பன்னிரு திருமுறை வரலாறு

நந்தி யருளாலே நாதனும் பேர்பெற்ருேம் நந்தியருளாலே மூலனே நாடிளுேம் நந்தி அருளா அது என்செய்யும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந்தேனே. (திருமந்திரம்-68) எனவும் வரும் அவரது வாய்மொழிகளால் நன்கு விளங்கும். இத்திருப்பாடலில், நந்தி அருளா அது என ஆசிரியர் சுட்டியது, இறைவனுல் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. இவ்வாறு இறைவன் தம்முடைய பழைய உடம்பினை மறைத்து மூலனுடம்பிற் புகச் செய்தருளிய இப்படைப்பு, அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங் களைத் தமிழ்ப்பாக்களால் நன்ருகப் புனைந்து போற்றுதற் கேற்ற நலந்தரும் வாழ்வினை நல்குவதெனவுணர்ந்த திருமூலர், தாம் மேற்கொண்ட மூலனுடம்பினை எனது முன்னைத்தவத்தின் பயணுக எனக்கு இறைவல்ை நன்ருகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்லபடைப்பு இது வாகும் எனக்கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,

பின்னை நின் றென்னே பிறவிபெறுவது முன்னை நன்ருக முயல் தவஞ் செய்கிலர் என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்ச் செய்யுமாறே. (திருமந்திரம்-81) எனத் தமிழ்மாலைகளால் இறைவனைப் போற்றி மகிழும் நிலையில் தாம்பெற்றுள்ள உடம்பினை ஆசிரியர் பாராட்டி மகிழ்தலாற்புலளும்.

இறைவன் திருவருளால் மூலனுடம்பிற்புக்க சிவ

யோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்து அங்கு எழுந்தருளிய அம்மையப்பர் திருவடிகளைப் போற்றிப் பரவி, அத்திருக்கோயிலை அடுத்துள்ள தோர் சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,

சேர்ந்திருந் தேன் சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன் சிவ வைடு தண்டுறை

சேர்ந்திருந் தேன் சிவ போதியி னிழலிற்

சேர்ந்திருந் தேன் சிவன் நாமங்கள் ஓதியே (திருமந்திரம்-79) எனவும,

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்னந்தி இணையடிக் கீழே. (ഒു.-80) எனவும,