பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் வரலாறு 413

ஞானத் தலைவி தன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பாலாட்டி நாதனை யர்ச்சித்து நானு மிருந்தேன் நற் போதியின் கீழே, (திருமந்திரம்பி32)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். இத்திருப்பாடலில் நந்திநகர் ' என்றது திருஆவடுதுறையின.

சைவ சமயத் தனிநாயனுகிய இறைவனுடைய திருவடி களே இறைஞ்சிச் சிவயோகத்தமர்ந்து அம்முதல்வனருளிய சிவாகமப்பொருளை விரித்துரைக்கத் திருவுளங்கொண்ட திருமூலர், இறைவன் திருவருளே இடைவிடாது சிந்தித் திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய திருப்பாடல்களை அருளிச் செய்தார் என்பதும், ஆசிரியர் இவ்வருள்நூலுக்கு இட்ட பெயர் திருமந்திரமாலை என்பதும்,

நந்தியிணையடி நான் தலை மேற்கொண்டு

புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள் தொறும்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற்றேனே. (திருமந்திரம்-73) எனவும்,

பிறப்பிலி நாதனைப் பேர் நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை உறைப்பொடுங் கூடிநின் ருேதலுமாமே. (ഒു.-86)

என வும் வரும் ஆசிரியர் வாய்மொழிகளால் நன்கு புலனும்.

தவமுனிவராகிய திருமூலர் தமிழாகமமாகிய இந்நூலை அருளிச் செய்த காலத்தில் தமிழ்மொழியிற் சைவ சமய நுண்பொருள்களை விரித்துரைக்கும் சாத்திர நூல்கள் சிலவாக அருகிக் காணப்பட்டன. ஆயினும் அந்நூல்களில் இல்லாத பொருள்கள் வேறெங்கும் இல்லை என்னும்படி உலக மக்கள் உணர்ந்து உய்திபெறுதற்குரிய அரும் பொருள்கள் அனைத்தும் இறைவனருளால் நிரம்பி யிருந்தன. இவ்வுண்மையினை,

அங்கி மிகா மை வைத் தான் உடல் வைத்தான் எங்கு மிகாமை வைத்தான் உலகேழையும் தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கி மிகா மை வைத்தான் பொருள் தானுமே. (டிை-8?)