பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#iá. பன்னிரு திருமுன்ற வரில்ாறு:

எனவரும் திருப்பாடலில் திருமூலர் தெளிவாக வெளியிட் டருளிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

அகத்தியமுனிவரைக் காணவிரும்பித் திருக்கயி லாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலருடன் அளவளாவினர் எனத் திருத்தொண்டர் புராண ஆசிரியர் குறித்தலாலும், தென்றமிழ் நாட்டில் பொதியமலையில் எழுந்தருளியிருக்கும் அ. க த் தி ய முனிவரோடு பழகிய கேண்மையில்ை அவரைக் கண்டு அளவளாவப்புறப்பட்டு வந்ததலுைம், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அம்மை கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தமிழகம் ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத்தலேயும், வழிப் போவோர் அச்சமின்றிச் செல்லவொண்ணுதவாறு கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறிப்பிடுவதாலும், இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூலனுடம்பிற் புகுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையாரென்பதும், சிவாகமப் பொருளை நன்ருகத் தமிழ்ச்செய்யுமாறு தம்மை இறைவர் நன்ருகப் படைத்தார் என அவரே தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக்கூறுதலால் அவர் தமிழ்க் குலத்திற் பிறந்தவரென்பதும், ஆகவே தென் தமிழ் நாட்டிலிருந்து வடகயிலையையடைந்து வாழ்ந்த தமிழ் முனிவர் திருமூலர் என்பதும் நன்கு துணியப்படும்.

திருமூலர் தம்முடன் நந்தியெம் பெருமான்பால் உப தேசம் பெற்றவர்களாக (ச் சனகர், சனந்தனர், சஞதனர், சனற்குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும் சிவயோக மாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தெரிசனம் கண்ட பதஞ் சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளதனை நோக்குங்கால்,

& 1. தமிழ் நூல்களும் அவற்றின் பொருள்களும், சில் வாழ் நாட் அல்பிணிச் சிற்றறிவினரான மக்கள் உணர்ந்து மெய்ப்பயன் பெறுதற்குத் தக்க அளவு வைத்து அறிவின் எல்லே கடவாமல் அழகுற அமைக்கப்பட்டன என இத்திருப்பாட்டிற்குக் கருத்துரைப் பர் மறைமலையடிகளார். (மாணிக்கவாசகர் காலம்-பக்கம். 179).