பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயகுர் வரலாறு 雏旗飘

இவர் மேற்குறித்த சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக் கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தை ஒட்டி வாழ்ந்த சிவாகமச் செல்வ ரென்பது நன்கு புலனுகும். அன்றியும் சிவயோகியராகிய இவர், தில்லையிற் பதஞ்சலி முனிவருடன் இறைவனது திருக்கூத்தினைக் கண்டு வழிபட்டு மகிழ்ந்தா சென்பதும், தில்லையில் திருக்கூத்துக் கண்டபின் இவ் வுலகில் நெடுங்காலம் இருந்தவரென்பதும்,

செப்புஞ் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே. (திருமந்திரம் 74) என இவர் தமது வரலாறு கூறுதலால் இனிது விளங்கும் இவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தாம் தங்கியிருந்த காரணம் இறைவனுடன் பிரிப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவளுபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ்வன்னையின் திருவருளால் இவ்வுலகிற் பத்தி நெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலை பெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய இத் திருமந்திரப் பனுவலே அருளிச் செய்தற் பொருட்டே என்பதனை,

இருந்தவக் காரணங் கேளிந் திரனே பொருந்திய செல்வப் புவணு பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித்தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியிஞலே, (திருமந்திரம் 75)

எனவும்,

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே, (திருமந்திரம் 77) எனவும் தன் மா ணுக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் என்பவர்களை நோக்கிக் கூறும் முறையில் அமைந்த இத் திருப்பாடல்களால் திருமூலர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

திருமூலராகிய இச் சிவயோகியாரால் அன்புடன் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற் பொருளைக் கேட்டுணர்ந்த மாளுக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு,