பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் காலம 強蠶罩

செய்தார் எனச் சேக்கிழார் திருமூலநாயனுர் புராணத்திற் குறித்துள்ளார். இங்ங்னம் ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களும் பாடப்பெற்றன என்பதற்குத் திருமந்திரத்தில் தெளிவான சான்றெதுவும் காணப்பட வில்லை. எனினும், சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவயோகத்தில் அமர்ந்து இருந்தார் என்பது,

  • ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே (திருமந்திரம் 74) எனவும்,

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி (திருமந்திரம் 80)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். மேற்காட்டிய திருமந்திரத் தொடரில் ஆசிரியர் இக்காயத்தே என்று சுட்டியது, சிவயோகியார் ஆகிய அவர் மூலன் என்னும் இடையனுடம் பிற் புகுந்து நிலைபெற்ற பின்னராதலின், அவரால் இக் காயம் ' எனச் சுட்டப்பட்ட உடம்பு மூலனுடைய உடம்பெனக் கொள்ளு

தல் பொருந்தும், எண்ணிலிகோடி என்றது அளவுட்

பட"ேதி ப ல் ல | ண் டு க ள் எனப் பொருள்தந்து

நின்றது.

திருமூலர் திருமத்திரமாலையை அருளிச் செய்த

காலத்து இந்நாட்டின் தாய்மொழியாகிய தமிழும்

தமிழகத்தைச் சூழவுள்ள புறநாடுகளாகிய பதினேழ் நிலங் களின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெண் மொழிகள் வாயிலாக வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அறிஞர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தார்கள். வெவ்வேறு நாடுகளுக்கு உரியனவாய்ச் சொல்வகையால் வேறுபட்ட இப்பதினெண் மொழிகளையும் அண்ட முதல்வளுகிய இறைவனே மக்கட் குலத்தார் அறமுதற்பொருள்களை யுணர்ந்து உய்தி பெறுதற்குரிய சாதனங்களாகப் படைத்தளித்தனன் எனச் சான்ருேர் பலரும் நன்கு மதித்துப் போற்றினர்கள். மேற் குறித்த பதினெண்மொழிகளில் கூறப்படும் அறமுதற் பொருள்களை உள்ளவாறு கேட்டு உணர்ந்தவர்களே. பண்டிதர் என அக்காலத்திற் சிறப்பாக மதித்துப் பாராட்டப்பெற்றனர், இச்செய்தி,

27