பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛盘8 பன்னிரு திருமுறை வரலாறு

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங் கண்டவர் கூறுங் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ் சொன்னவாறே. (திருமந்திரம் 59) எனவரும் திருமந்திரத்தால் இனிது புலனுதல் காணலாம். பதினெண்மொழிகளாவன இன்னவென்பது,

  • அங்கம் வங்கம் கலிங்கம் கெளசிகம்

சிந்து சோனகம் திராவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம் துளுவம் சாவகம் சீனம் காம்போ ஜம் பருணம் பப்பரம் எனப் பதினெண் பாடை , எனவரும் சேந்தன் திவாகரத்தாலும், " ஒன்பதிற் றிரண்டி னிற் றமிழொழி நிலத்தினும் " ..நன்னூல் சூ 272 என வரும் தொடர்க்கு, "தமிழொழி பதினேழ் நிலமாவன :

சிங்கள ஞ் சோனகஞ் சாவகஞ்சீன ந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலிங்கம் கலிங்கம் வங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசல ந் தங்கும் புகழ்த் தமிழ் சூழ் பதினேழ்புவி தாமிவையே என்பன. அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவம், அங்கம் என்பன முதலானவை இவற்றின் பரியாயமும் பேதமுமாய் இவற்றுள்ளே அடங்குமென்க” என மயிலைநாதர் கூறிய உரை விளக்கத்தாலும் உய்த்துணரப்படும்.

மேற்குறித்த பதினெண் மொழிகளுள் தமிழுடன் ஏனைய பதினேழு மொழிகளையும் இனத்துப் பதினெண் மொழிகள் எனத் தொகைப்படுத்து வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படாமை யால், பதினெண் மொழிகளைக் குறி தத இத்திருமந்திரம் கடைச்சங்க காலத்திற்குப்பின் இயற்றப பெற்றதெனக் கருதுதல் பொருந்தும்.

திருமூலர் அருளிய திருமந்திரமாக யில், திருவள்ளுவர் அருளிய திருக்குறளிலுள்ள சொற்ருெடர்களும் பொருள் களும் அவ்வாறே எடுத்தான் ப் பெற்றுள்ளன.

திருமூலர் , தம் காலத்தில் நிலவிய தமிழ்நாட்டின் பகுதிகளைத் தமிழ் மண்டலம் ஐந்து எனக் குறித்து உள் ளார். எனவே அவர் காலத்தில் தமிழகம் ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு ஆளப்பட்டதென த் தெரி

கிறது. ஆசிரியர் தொல்காப்பியனுர் வாழ்ந்த காலத்தில்