பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 பன்னிரு திருமுறை வரலாறு

ஆர்வமுடையவர் காண்பர் அரன் தனை

ஈரமுடையவர் கண் பார் இணையடி

பார முடையவர் காண்டார் புவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்கு புக்காரே. (திருமந்திரம் - 273) என வரும் திருப்பாடலில் திருமூலர் எடுத்துக்காட்டியிருத் தலும், கி. பி. ஐந்தாம் நூற்ருண்டிலிருந்தவராகக் கருதப் படும் முன்றுறையரையனுர் என் பார்,

ஏமரார் கொங்கேறிஞர் (பழமொழி நானூறு -282) என இதனை ஒரு பழமொழியாக எடுத்தாண்டிருத்தலும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும். இத்து ரநிலை சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் வரையிலும் தொடர்ந் திருந்த தென்பது.

கொங்கேயுகினும் கூறைகொண் டா தலைப் பாரிலை" (7-92-3) என வரும் தேவாரத் தொடரால் உணரப்படும்.

திருமந்திரத்தில், தில்லைத் திருச்சிற்றம்பலத் திருக் கோயில் பொன்னம்பலம் எனப் போற்றப்பட்டிருத்தலால் தில்லையிற் கூத்தப்பெருமான் ஆடல் புரிந்தருளும் திருவம் பலம் பொன்வேயப்பெற்ற பின்னரே இத்திருமந்திரப் பனு வலைத் திருமூலர் இயற்றியிருத்தல் வேண்டும் எனக் கருதுதல் பொருத்த முடையதாகும். தில்லையிற் கூத்தப் பெருமான் அருட் கூத்தியற்றும் திருவம்பலத்திற்கு முதன் முதற் பொன்வேய்ந்து அதனை ப் பொன்னம்பலமாக்கிய புகழுக்கு உரியவன் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனுகிய சிம்மவர்மன் என்பர் அறிஞர். எனவே அவ்வேந்தனுற் பொன்வேயப்பெற்ற திருவம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயராற் போற்றிய திருமந்திர மாகிய இந்நூல், கி.பி. ஐந்தாம் நூற்ருண்டின் இறுதியிலோ அன்றி ஆரும் நூற்ருண்டின் முற் பகுதியிலோ நிறைவு பெற்றதெனக் கருதுதல் ஏற்புடையதாகும்.”

திருமூலர் இப்புவிமேல் மூவாயிரம் ஆண்டுகள் சிவ

யோகத்தமர்ந்திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர மாலையைப் பாடியருளிஞர் எனச் சேக்கிழாரடிகள் கூறுத லால், திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியின் கீழ்ச்

1. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு இருண்ட காலம்) பக்கம் 33.

2. ഒു.