பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் காலம் 424

சிவயோகத்தமர்ந்த காலம் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டிற்கு முன் பன்னுாருண்டுகளாகும் எனக்கருதுதல் பொருந்தும். எனவே எண்ணிலி காலம் சிவயோகத்தமர்ந்த அத் தவ முனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் தமிழ் நாட்டில் இருந்திருத்தல் கூடும் என எண்ணுதற்கு இட முண்டு. தொல்காப்பியம் புறத்திணையியல் 20-ஆம் சூத்திர வுரையில்,

" யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேயத்து அனை நிலை வகையோராவர். அவர்க்கு மாளுக்கராகத் தவஞ்செய் வோர் தாமதப் பக்கத்தராவர் ”

என நச்சினர்க்கினியர் கூறும் விளக்கம், பெரு"ை

வாய்ந்த சிவயோகியாராகிய திருமூலநாயனரையும் அவர் தம் மாளுக்கர்களையும் குறித்ததெனக் கருதவேண்டியுளது. யாப்பருங்கலம் செய்யுளியற் புறநடைச் சூத்திரவுரை யில் ஆரிடப்பே லி என்னும் செய்யுளமைப்பினை விளக்கக் கருதிய ய பருங்கல விருத்தியுரையாசிரியர்,

" மனத்தது பாடும் மாண்பிளுேரும்

சினத்திற் கெடப்பாடுஞ் செவ்வியோரும் மூனிக்கணச் செய்யுள் மொழியவும் பெறும் என்பது பாட்டியல் மரபு " எனக்குறித்து,

இலை நல வாயினும் எட்டி பழுத்தால் குலே நல வாங்கனி கொண்டு.ணலாக - விலையான் முலே நலங் கொண்டு முறுவலிக் கின்ற வினையுடை நெஞ்சினை வேதுகொளிரே ! இம் மூலர் வாக்கு மிக்குவந்தவாறு கண்டு கொள்க " எனத் திருமந்திரம் 204ஆம் செய்யுளை எடுத்துக்காட்டியுள்ளார்.

1. இத் திருமந்திரத்தின் இரண்டாம் அடியின் இறுதியில் மிக்குவந்த விலையான் என்ற தனிச்சொல், திருமந்திரச் சுவடி களிலும் வெளிவந்த பதிப்புக்களிலும் காணப்படவில்லை. மேற்குறித்த தனிச்சொல் இதன்கண் இன்றியமையாது இடம்பெறத்தக்க சொல் லும் அன்று. அன்றியும் தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரப் பாடல் களில் இவ்வாறு தனிச் சொற்பெற்று மிக்குவரும் நிலையில் இது போன்று வேறு ஒரு பாடல் கூடக் கிடைக்கவில்லை. எனவே யாப் பருங்கல விருத்தியுரையாசிரியரால் மிக்குவந்ததாகக் காட்டப்பெற்ற இப்பாடல், திருமந்திரம் 204ஆம் திருப்பாடலைத் தவறுபட மனப் பாடஞ் செய்தோர் வாயிலாகத் திரிந்து வழங்கிய பாடலெனக் கொள்ள வேண்டியுளது.