பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பன்னிரு திருமுறை வரலாறு


(3) திருவாதவூரர் புராணம்

திருவாதவூரடிகள் மதுரையை விட்டகன்று தில்லைச் சிற்றம்பலவன் திருவடி நீழலெய்தியது வரையுள்ள நிகழ்ச்சி களைப் பெரும்பற்றப்புலியூர் நம்பி இரண்டு செய்யுட்களில் தொகுத்துக் கூறி முடித்தார். அடிகளது வரலாற்றின் பிற் பகுதியாகிய அதனைப் பரஞ்சோதி முனிவர் சில பாடல்களில் வகுத்து விளக்கினர். இவ்விருவர் நூல்களிலும் சுருக்கமாக வும் சிறிது விரிவாகவும் கூறப்பட்ட செய்திகளேயும் அறவே கூறப்படாது எஞ்சிய செய்திகள் சிலவற்றையும் ஆராய்ந்து நோக்கி அடிகளது வரலாற்றைத் தொடக்கம் முதல் இறுதி வரை முழுவதும் விரித்துக் கூறும் நூல், கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரர் புராணமாகும். அடிகளது வரலா ருென்றையே பொருளாகக்கொண்டு பாடப்பெற்ற இந்நூல், இலக்கியச்சுவை நிரம்பிய செந்தமிழ்க்காப்பியமாகத் திகழ் கின்றது. இரண்டு திருவிளே யாடற் புராணங்களிலும் கூறப்படாது இந்நூலில் மட்டும் கூறப்படும் குறிப்புக்களைத் தொகுத்து நோக்குவோமாக.

ஆரிய தேசத்து வணிகர்கள் குதிரைகளுடன் சோழ நாட்டுக் கடற்கரையிலே வந்து இறங்கிய செய்தியைத் தூதர்கள் :ாண்டியனுக்குத் தேரிவித்தார்கள், பாண்டியன் தன் அமைச்சராகிய வாதவூரரை நோக்கி விேர் தூதராகிய இவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருவீராக’ எனப்பணித்தான். அறநெறியால் வந்த பொருளில் நாற்பத்தொன்பது கோடி பொன்னே அரசன் அவரிடம் கொடுத்தான். அப்பொருளை ப் பெற்ற வாதவூரர்

நல்ல நாளிலே சொக்கலிங்கப் பெருமான வணங்கிப் பாண்டியன்பால் விடை பெற்றுப் பரிசனங்களுடன் மதுரையி

லிருந்து புறப்பட்டுக் கீழ்த்திசை நோக்கிப் பல காவதது.ாரஞ்

சென்று திருப்பெருந்துறையை அணுகிஞர்.

அந்நிலையில் வாதவூரரை ஆட்கொள்ளத் திருவுளங் கொண்ட சிவபெருமான் சிவகனநாதர்கள் அடியவர்களாகிச் சூழ்ந்து போற்ற ஆசிரியத் திருமேனிகொண்டு திருப்பெருந் துறையிலுள்ளதொரு பூஞ்சே லேயிலே குருந்த மரத்தடியில்

எழுந்தருவியிருந்தார். அச்சோலையின் அருகே வந்த

வாதவூரர், அதனுள்ளிருந்து வந்த சிவாகம ஒலியைக் கேட்டுத் தம்முடன் வந்த ஏவலரை நோக்கி இவ்வொலி