பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏葱 பன்னிரு திருமுறை வரலாறு

திருமூலர், வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் தெளிந்துணர்ந்த சிவஞானச் செல்வராய்த் தாம் சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இமய முதற் குமரி வரையுள்ள இந்நாட்டவர் பலரும் ஒதியுணர்ந்து உய்தி பெறுதல் வேண்டும் என்னும் அருளுள்ளத்தால் இத்திரு மந்திர மாலையை அருளிச் செய்தாராதலின், அவரருளிய திருமந்திரப் பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம் ஆணவம், கன்மம், மாயை : சித்து, அசித்து சரியை, கிரியை, யோகம், ஞானம் : சத்து, அசத்து, சதசத்து வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் : நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம், சத்தாதி வாக்குமளுதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம், விஞ்ஞானர், பிரளயா கலத்து அஞ்ஞானர், சகலத்தின் அஞ்ஞானர் இயமம், நியமம், ஆதனம் பிராணுய மம், பிசத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ருற்போலும் வட சொற்களும் தொடர்களும் அக்காலத் திற் பொதுமக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் ஆங்காங்கே இடம் பெறுவனவாயின. தமிழ் வட மொழியாகிய இரு மொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்துக் கூறிய அணுவன் 2501), மாயாள் (399) என்ருற் போலும் புதுச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. வேத ஆகமங்களின் முடிந்த முடியாகிய சைவ சமயம் என்ற பொருளிற் சித்தாந்தம் என்ற வட சொற்ருெடரை முதன் முதல் வழங்கியவர் திருமூலரேயாவர். சுந்தரர் காலத்துப் பல்லவ மன்னனுகிய இரண்டாம் நரசிங்கவர்மன், தான் காஞ்சியில் எடுப்பித்த கைலாசநாதர் கோயிலிற் பொறித் துள்ள வடமொழிக் கல்வெட்டில் சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்று வன் எனத் தன்னைக் கூறியிருப்பது . இங்கு அறியத்தக்கதாகும்.

ஆரியமும் தமிழுமாகிய இருமொழிகளையும் நன்கு பயின்று வடநாடு தென்னடுகளிற் போக்குவரவு புரிந்த தவமுனிவராகிய திருமூலர் அருளிய பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வடசொற்களும் அக்காலத்திற்

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எண் 25,