பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயனர் காலம் 423

பொதுமக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் விரவிக் கானப்படுதல் இயல் பேயாகும். ஆகவே திருமந்திரப் பாடல்களின் சொல்லமைப்பு ஒனறே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மையினைக் குறித்து ஐயுறு தற்கு இடமில் லே யென் க.

திருமூலர், தம் நூலில் ஆறு சமயங்கள் எனவும் அவற்றிற் பலவாகிய நூறு சமயங்கள் எனவும் நாட்டில் வழங்கிய பிற சமயங்கள் பற்றிக் குறித துள்ளார் ஆயினும் வேத வழக்கொடு மாறுபட்ட புறச் சமயங்களாகிய புத்த சமண மதங்களே ப்பற்றிய குறிப்பு எதுவும் திருமந்திரத்தின் புறச் சமய துண்டணம் பற்றிய பாடல்களில் இடம பெற வில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ்நாட்டிற் புகுந்து யாண்டும் பரவி வேரூன்றி நிலைபெறுதற்கு முன்னரேயே சிவயோகியாராகிய திரு மூலர், சிவாகமப் பொருள் குறித்த இத்திருமந்திரப் பனு வலை இயற்றியருளினுள் என்பது இனிது விளங்கும்.

திருமூலர், மூலனுடம்பிற் புகுமுன் தமக்குரிய முன்னைய உடம்புடன் கூடிய நிலையில் அவர் பாண்டி நாட்டிற் பிறந் தவரென்றும், அவர் க்குப் பெற்ருேர் இட்ட பெயர் சுந்தரன் என்பதாமென்றும், அவர் பொதியமலையில் அகத்தியர் பால் தமிழ்க் கல்வி பயின்ரு ரென்றும், பின் அவரருளாற் கயிலை சார்ந்து நந்தி பெருமான்பால் ஞான நூல்களைக் கற்று நாதர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ருரென்றும், அவர் திருக்கயிலையிலிருந்து தென் றிசை போந்தது கி. மு. 6000-க்கும் கி. மு. 3100-க்கும் இடைப்பட்ட காலம் என்றும் கி. மு. 600 இல் திருக்கயிலையிலிருந்து பதஞ்சலி வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்களுடன் தில்லைக்கு வந்து நடன தரி சனங்கண்டு வடகயிலை சென்று தவமிருந்தாரென்றும், கி. மு. 3100இல் அகத்திய முனிவரைக் காணவேண்டி இரண்டாம் முறையாகத் தென்றிசைக்கு வந்தாரென்றும், வரும் வழியில் சாத்தனு ரில் ஆவுறு துயரங்கண்டு மூல னுடம்பிற் புகுந்து திருவாவடுதுறையில் 3000 ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்திருந்து மூவாயிரம் திருமந்திரங்களை அருளிச்செய்து கி. மு. 100ஆம் ஆண்டில் மீளவும் வட கயிலை சென்று பிறவாநெறி பெற்ருரென்றும் திருமூலராகிய சிவயோகியாரது முன்னைய உடம்பின் பிறப்புப் பற்றியும்