பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

பன்னிரு திருமுறை வரலாறு


திருமந்திரப் பாடற்ருெகை

திருமந்திரம் மூவாயிரம் திருப்பாடல்களையுடைய தென்பது, முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ்மூவாயிரஞ் சாத்தி' எனவரும் சேக்கிழார் வாய்மொ ழியாலும் மூலனுரைசெய்த மூவாயிரந்தமிழ் (திருமந்திரம்-99, 3046) முத்திமுடிவிது மூவாயிரத்திலே டிை 100) தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் (டிை 101 எனத் திருமந்திரப் பாயிரத்திலும் நூன்முடிவிலும் வரும் பாடற் ருெடர்களாலும் அறியப்படும். இப்போது திருமந்திர நூலில் உள் ளனவாக வழங்குவன காப்புச் செய்யுளோடு சேர்த்து 8048 பாடல்களாகும். திருமந்திரச் செய்யுட்கள் என வேறு நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டுத் திருமந்திரச் சுவடிகளிலும் வெளிவந்த பதிப்புக்களிலும் நூலுட் சேர்க்கப்படாதுள்ளவை 14 பாடல்கள். சில ஏட்டுச் சுவடிகளில் இருந்து அச்சில் வெளிவராதன வாய்ச் சைவசித்தாந்த சமாசப் பதிப்பில் வெளியிடப்பெற்றவை 17 பாடல்கள். இவற்றின்மேலாக வெள்ளியம்பலவானத் தம்பிரான் சுவாமிகளால் ஞாளுவான பாடியத்திலும் முத்தி நிச்சயப் பேருரையிலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட திருமந்திரப் பாடல்களில் இதுவரை வெளிவராதன வாக உள்ளவை ஏறக்குறைய முப்பது திருப்பாடல்களாகும். இவையெல்லாவற்றையும் சேர்த்தெண் ணுங்கால் திரு மந்திரப் பாடல்களின் தொகை 8100 ஆக உயர்கின்றது.

இவ்வாறு திருமந்திரப் பாடற்ருெகை மூவாயிரத்திற் கும் மேலாக மிகுந்து காணப்படுதற்கு இவற்றுட் சில பாடல்கள் பொருளியல்பு பற்றி இரு முறையும் மும் முறையு மாக இடம் பெற்றிருத்தலும், சில பாடல்கள் பாட பேதங் களால் உ. ருத்திரிந்து வெவ்வேறு பாடல்களாக எழுதப் பெற்றிருத்தலும், திருமந்தி த்தைப் பயின்ற பிற்காலச் சான்ருேர் சிலர் அவ் வருள்நூலின் சொற்பொருள் நடையினை அடியொற்றிப் பாடிய பாடல்கள் சில யாப்பு ஒப்புமை பற்றித் திருமந்திரம் என்ற பெயராற் குறிக்கப் பட்டிருத்தலும் அவற்றுட்சில இந்நூலில் ஆங்காங்கே இடைச் செருகலாக இடம் பெற்றிருத்தலும் காரணங் களாகும.

1. இந்நூலிற் காணப்படும் ஒட்டியானம் (818), கடுக்கன் (1424), மல்லாக்கத்தள்ளல் (199), வட்டி (260), பொதுக்கென (2950),