பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரப் பாடற்ருெகை 4器瑚

திருமூலநாயனர் இத் திருமந்திர மாலை ைய ஒன்றவன் ருன் என்ற திருப்பாடலை முதலாகக் கொண்டு தொடங்கி மூவாயிரந் திருப்பாடல்களால் நிறைவேற்றி அருளிஞர் என்பது,

ஏனவெயி றணிந்தாரை ஒன்றவன்ருனென வெடுத்து முன்னிய அப்பொருண் மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி'

எனச் சேக்கிழாரடிகள் கூறுதலால் இனிது விளங்கும். ஒன்றவன் ருன் எ ன வ ரு ம் இத்திருப்பாடலுக்கு முன்னே,

ஐந்து கரத்தனை யானே முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன் றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

எனவரும் விநாயகர் வணக்கத் திருப்பாடல் இத்திரு மந்திரத்திற் காப்புச் செய்யுளாக இடம் பெற்றுள்ளது. மூத்த பின் ளே யாராகிய யானைமுகக் கடவுளது வழிபாடு கி. பி. ஆரும் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்தே தமிழ்நாட் டில் நிலைபெறுவதாயிற்றென்பது ஆராய்ச்சியாளர் துணி பாதலா னும், திருமந்திர நூலினுள்ளே சிவபெருமானது திருக்குமாரராகிய அறுமுகச் செவ்வேளையும் ஐயனுரையும் குறித்த திருமூலர், மூத் பிள்ளையாரெனப் போற்றப்பெறும் விநாயகக் கடவுளைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமையானும், ஒன்றவன் ருன் என்ற படலையே திருமந்திரத்தின் முதற் பாடலாக ஆசிரியர் சேக்கிழார் குறித்தமையானும் ஐந்து கரத்தனை என்னும் இத் திருப்பாடல் பின் வந்த சான்ருே ரொருவரால் இந்நூற்குக் காப்புச் செய்யுளாகப் பாடிச் சேர்க்கப்பட்டதாதல் வேண்டும்.'

சிதம்பரம் (1726, 2653, 2722 முதலான சொல் வழக்கு இதில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்ட சில பாடல்கள் உண்டு என்பதை உறுதிப்படுத்தல் அறியத் தக்கது."

(தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு. இருண்டகாலம் - பக்கம் - 81).

1. ஆசிரியர் மறைமலையடிகளார் எழுதிய மாணிக்கவாசகர் காலம் பக்கம் - 81.