பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு క్షీ$5

தமிழாகமமாகிய இந்நூல், இறைவனருளே நிரம்பப் பெற்ற சிவயோகியாராகிய திருமூலநாயனுசால் தமிழ்மொழி யில் முதல் நூலாக அருளிச் செய்யப்பெற்றதென்பது, தொன்று தொட்டு வழங்கிவரும் வரலாற்றுண்மையாகும். அங்ங்னமாகவும், திருமூலராகிய சிவயோகியர் தாம் கயிலையிலிருந்து வரும் பொழுதே மந்திர மாலிகா என் ருெரு வடமொழி நூலைக் கொண்டு வந்து தமிழில் மொழி பெயர்த்தாரென்றும், உபமன்யு பக்த விலாசத்திற் கூறப் படும் அவரது வரலாற்றை நோக்கின் இதன் முதல் நூல் வடமொழியில் உள்ளதென்பது போதரும் என்றும் அறிஞ ரொருவர் எழுதியுள்ளார். உடமன்யு பக்த விலாசம் என்பது சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராண மாகிய பெரிய புராணத்தை அடியொற்றி வட மொழியில் அமைந்த மொழிபெயர்ப்பு நூ. லென்பது, காய்தலுவத்த லகற்றி ஆராயவல்ல நல்லறிஞர் பலருக்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். வடமொழியில் அமைந்த அந்நூலில் திருமந்திரமாலை என்னும் இந்நூலின் பெயர், பூரீ மந்த்ர மாலிகா என வடமொழி மரபிற்கேற்ப மொழிபெயர்த் தமைக்கப்பெற்றது. திருமந்திர மாலே ' என்னும் தமிழ் நூற்பெயர் வடமொழி நூலில் அம்மொழி மரபிற்கேற்ப பூரீ மந்த் மாலிகா எனக் குறிக்கப்பட்டிருத்தலை ஆதார மாகக் கொண்டு திருமூல நாயனரால் முதல் நூலாக அருளிச் செய்யப்பெற்ற இத்திருமந்திர மாலையை வட மொழி நூலொன் றின் மொழிபெயர்ப்யெனத் துணிந்து கூறுதல், நடுநிலையில் நின்று ஆராய்ந்து உண்மை காணும் கடப்பாடுடைய ஆாய்ச்சியாளர்க்கு அடாத செயலாகும். ஆரியமும் தமிழும் இறைவனுல் அருளிச் செய்யப்பெற்ற ஆற்றல் மிக்க நன்மொழிகள் என்னும் உண்மை தெளிந்து அவ்விரு மொழி நூல்களையும் கற்றுனர்ந்த சிவயோகியா ராகிய திருமூலநாயனர் தாம் அருளிய இந்நூல், வடமொழி நூலொன்றின் மொழிபெயர்ப்பாக இருக்குமானுல் இந் நூல் அருளிச் செய்யவந்த வரலாற்றினை விரித்துரைக்கும் பாயிரப் பகுதியில் இச்செய்தியைத் தெளிவாக விளக்கியிருப் பார். அவ்வாசிரியருடைய வாய்மொழிகளை அகச்சான்று

1. திரு. விசுவநாத பிள்ளையவர்கள் பதிப்பித்த திருமந்திரப் பதிப்பில் டாக்டர் W. ரமண சாஸ்திரியாரவர்களால் எழுதப்பட்ட

ஆங்கில முகவுரை.