பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 44%.

தின் முடிந்த முடிபாகிய சைவசித்தாந்த உண்மைகளையும், 6 முதல் 9 வரையுள்ள நான்கு தந்திரங்களும் ஞானம்பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக் கன வாயுள்ள நற்பயன்களை யும் பற்றி விரித்துக் கூறும் முறையில் அமைந்துள்ளன.

ஞானம் பெற முயல்வோர் அதற்குத் தகுதியுடையா ராகத் தம்மைத் துய நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி அதற் குரிய சாதனங்களையும் உபதேசிப்பது இந்நூலின் முதல் தந்திரமாகும் இஃது இருபத்து நான்கு அதிகாரங்களாகப் பகுக்கப்பேற்றுன் எது. இதன் தொடக்கத்திலுள்ள முப்பது திருப்பாடல்களும் உபதேசம் என்ற தலைப் பில் அமைந்துள் ளன. இதனை யடுத்து யாக்கை நிலையாமை, செல்வம் நிலை யாமை, இளமை நிலையாமை என்பன உலகியலில் வைத்து அறிவுறுத்தப்பெற்றுள்ளன. ஐந்தாவதாகவுள்ள உயிர் நிலை யாமை என்ற தலைப்பில் பத்துத் திருப்பாடல்கள் உள்ளன. உயிர்கள் என்றும் அழியாத நிலையுடைய பொருள் என்பது சைவ சித்தாந்தக் கொள்கையா தலை யாவரும் அறிவர். அங்ங் சமாகவும் இங்கு உயிர்நிலை யாமை என்றது மன் னுயிர் தான் எடுத்துள்ள ஒருடம்பிலேயே விரும்பி நிலை பெற்றிருக்க இயலாத தன்மையைக் கூறுவதாகும். * வீயாது, உடம்பொடு நின் றவுயிருமில்லை, மடங்கலுண்மை மாயமே வன்றே' (363) எனவரும் புறப்பாடற்ருெடர் ஈண்டு நினைக்கத்தக்கதாகும். இதனையடுத்துக் கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன்மனை நயவாமை, மகளிர் இழிவு, நல்குரவு ஆகிய அதிகாரங்களில் அமைந்த பாடல்கள் உள்ளன. இவை தமிழ் மறையாகிய திருக்குறளின் அதி காரத் தலைப்பினையும் பொருளமைதியை பும் அடியொற்றி அமைத் திருத்தல் காணலாம். இவற்றையடுத்து அக்கினி காரியம், அந்தண ரொழுக்கம், என்ற தலைப்புக்களிலமைந்த பு: டல்கள் வேதப்பொருள்களை உளங்கொண்டு கூறியன வாகும். அடுத்து அரசாட்சி முறை, வானச்சிறப்பு, தான ச் சிறப்பு, அறஞ் செய்வான் திறம், அறஞ்செயான் திறம், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணுமை ஆகிய தலைப்புக்களில் அமைந்த பாடல்கள் உலகியலொழுக்கமாகத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய பொருளுரைகளை அகத்துட்கொண்டு அப்பொருள் களை உலகியலின் உயிர்நிலையாய் நிலவும் மெய்ந்நெறி