பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பன்னிரு திருமுறை வரலாறு


பொழுது புலர்ந்ததும் வாதவூரர்க்குச் சிவாகமங் களின் சாரங்களையெல்லாம் விளங்க விரித்துரைத்துக் ' குருவாய் வந்த இவ்வுருவினை நின் மனத்தில் இருத்து வாயாக’ எனமொழிந்தருளினர். மெய்ப்பொருளுபதேசம் பெற்ற வாதவூரர். ஆசிரியரைத் துதித்துப் போற்றித் தாம் குதிரை வாங்குதற்கெனக் கொணர்ந்த பெரும் பொருளை அவர் திருமுன் வைத்து என்னுயிரும் உடலும் உடைமை யும் ஆகிய எல்லாம் நினக்கே உரியன எனக்கூறி வணங் கினர். ஆசிரியரும் அவர் தந்த பொருளை யேற்றுக் கொண்டு தம் அடியார்களுள் ஒருவரை நோக்கி இப்பொருள் எல்லா வற்றையும் சிவாலயத்திருப்பணிக்கும் அருந்தவத்தோராகிய அடியார்களுக்கும் வறுமையால் நலிவுற்ருர்க்கும் வழங்கு வீராக எனப் பணித்தார். அவரும் அவ்வாறே அப்பெரும் பொருளைச் சிவப்பணிக்குச் செலவிட்டார். திருவாதவூரர் பிறவித்தொடர்பு நீங்கிச் சீவன் முத்தராக விளங்கினுர். பரிசனங்கள் சூழ்ந்துவரக் குடை நிழற்றச் சிவிகையிலேறி வேந்தரைப் போன்று வந்த வாதவூரர், கோவண ஆடையும் முழு நீறு பூசப்பெற்ற மேனியும் விரித்த குடுமியும் உடைய ராய் நெஞ்ச நெக்குருகிக் கண்ணிர் சொரியத் தம்மை ஆட் கொண்டருளிய ஆசிரியரைத் தொழுது போற்றி அன்பினுல் அழுதரற்றினர். உலகத்தை அறவே மறந்து இரவு பகல் காணுராய் ஞான நன்னிலையில் நின்று பித்தர், பாலர், பேய் கோட்பட்டோர் என்னும் இவர்களது தன்மையை எய்

திஞர்.

உடன் வந்த பரிசனங்கள், பாண்டியன் வெகுள்வான் என அஞ்சி வாதவூரரை யடைந்து வணங்கித் தென்னவன் முனியா முன்னம் குதிரைத் தொகுதியினைக் கொண்டுசேர வேண்டுமெனச் சிந்தியாமையாகிய இது குற்றமாகும் என இரங்கி ஐயர்நீர் வருதல் வேண்டும் என அழைத்தார்கள். வாதவூரடிகள் அவர்களை இன்னுரென்றுணராதவராய் “நீவிர் பொய்யெலாம் உரைத்தல் வேண்டாம் இவ்விடத்தைவிட்டு அகலுமின்' எனப் புகன் ருர், அடிகளது நிலைகண்டு துயருற்ற பரிசனங்கள், அவரைவிட்டு நீங்கி மதுரையையடைந்து பாண்டியனை வணங்கி நிகழ்ந்தவற்றை எடுத்துரைத் தார்கள். அது கேட்டுச் சினமுற்ற பாண்டியன், திருமுகம் ஒன்று எழுதித் தூதர் கையிற் கொடுத்து இதனைக்காட்டி வாதவூரனைக் கைக்கொண்டு வம்மின்' எனப்பணித்தான்.