பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருமந்திரங்களால் திருமூலர் அறிவுறுத்தி யுள்ளமை நோக்கத் தக்கதாகும்.

இங்ங்ணம் இயமம் நியமம் முதலிய யோகவுறுப்புக் களால் உடம்பினை நன்கு பேணிச் சரியை கிரியை ஆகிய நெறிகளில் பயின்ற பின்னர்ச் சிவயோகத்தில் நிலை பெற்று நின்று சிவஞானமாகிய பயனைப் பெறுதற்கு நிறை மொழி மாந்தரருளிய மறைமொழிகளாகிய மந்திரங் களின் சாதகமும் அவற்றின் வலிமையும் பெறுதல் இன்றி யமையாததாகும். ஆகவே இந்நூலின நான்காந் தந்தி ரத்துள் திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திர ச் சக்கரங் களின் உபாசனை முறைகள் விரிவாக விளக்கப்பெற் றுள்ளன. இத் தந்திரம், அசபை என்பது முதல் நவாக் கரிசக்காம் ஈருகப் பதின் மூன்று தலைப்புக்களே யுடையதாகும். இதன்கண் மந்திரச் சக்கரங்களின் வடிவம், அளவு, வரை கள், அவற்றில் அடைக்கப்பெறும் மந்திர எழுத்துக்கள், உரிய மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், அவ்வவற்றின் அதிதெய்வம், வலிமை, பயன் முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இன்ன சக்கரத்தை இன்ன சாதனத்தில் எழுதி இன்ன இடத்தில் இன்னவாறு மேற்பூச்சும் அணி யும் மலரும் முதலியன சாத்தி இன்னபடி இத்தனை காலம் வழிபட்டால் வசியம் முதலாகச் சொல்லப்படும் உலகியற் பயன்களுள் இன்னின்ன பயன்களை எளிதிற் பெறலாம் என்ற உண்மையினை ஆசிரியர் இத்தந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

நன்னெறியினை நாடிய சாதகன், தான் இப்பிறப்பிற் கொண்டுள்ள ஓர் உடம்பில் நின்றே விரும்பிய பயன்களைப் பெறவேண்டியவளுவன். ஆக ேவ அவ்வுடம்பினைக் கெடாது நெடுங்காலம் நிலைபெறக் கொண்டு வையத்து வாழ்வாங்கு வாழ்தற்கேற்ற பயன்களையும் விரும்புதல் இயல்பாதலால், ஞான நூலாகிய இவ்வாகமங்களிலும் உலகியற் பயன்களைப் பற்றிய இவ்வழிமுறைகள் இடம் பெறுவனவாயின. இறைவன் தனது திருவருளாகிய சத்தியின் மூலமாகவே மன்னுயிர்கட்கு அருள் புரிவாளுத லின் இத்தந்திரத்திற் கூறப்படும் மந்திரச் சக்கரங்களிற் பெரும்பாலன அவனது திருவருளாகிய சத்தி பேதங் களைப் பற்றியனவாக அமைந்துள்ளன.