பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

பன்னிரு திருமுறை வரலாறு


ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாளுமே சென்றே புகுங்கதி யில்லை நும் சித் தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே. ്ങു. 21.04) இக்காய நீக்கி யினியொரு காயத்திற் புக்குப் பிறவா மற் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென் நக்கால முன்ன அருள் பெறலாமே. {ഞ്ചു. 2106) கூடியும் நின்றுந் தொழுதெம் மிறைவனைப் பாடியுளே நின்று பாதம் பணிமின்கள் ஆடியு ளே நின் றறிவுசெய் வார்கட்கு நீடிய வீற்றுப் பசுவது வாமே. ഒു. 2109) சார்ந்தவர்க் கின் பங் கொடுக்குந் தழல் வண்ணன் பேர்ந்தவர்க் கின் ஞப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குசைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுனர்வாரே. {ഒു. 211A)

எனவரும் திருமந்திரப் பாடல்கள் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.

எட்டாந் தந்திரம் ஆடலிற் பஞ்சபேதம் என்பது முதல் சோதனை என்பது ஈருக நாற்பத்து மூன்று உட்பிரிவுகளை யுடையது. இதன் கண் உடலிற் பஞ்ச:ேதம் சாக்கிரம் முத லிய அவத்தை பேதங்கள், கேவல சகல சுத்தம் என்னும் மூவகை நிலைகள், அறிவுதயம், ஆறந்தம், மகா வாக்கியம். வாய்மை, அவாவறுத்தல், பத்தியுடைமை, சோதனை முதலிய பொருள்கள் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. சிவ தரிசனத்தின் பின் சிவனுெடு கூடுதல் என்னும் சிவயோக நிலையினை உணர்த்துதல் எட்டா ந் தந்திரத்தின் கருத் தென்பர் பெரியோர். இத் தந்திரத்திற் கூறப்படும் சிவ யோக நிலைகள் பற்றிய அரும்பொருள்களும், மேற் கூறப் பட்ட அட்டாங்கயோகம் முதலிய நுண்பொருள்களும், அநுபவமுடைய ஆசிரியர்களை வழிபட்டு அவர்கள் அறி வுறுத்திய நெறியில் நின்று உணர்ந்து கொள்ளத் தக்கன வன்றி ஏனையோரால் எளிதில் உணரத்தக்கன அல்ல.

இத் தந்திரத்தில் அடித் தலையறியுந் திறங்கூறல் என்ற பகுதி, ஆன்மா இறைவன் திருவருளில் தலைப்பட் டுத் தாடலை போல் அடங்கி நிற்றலாகிய அத்துவித நிலையினைப் புலப்படுத்துவதாகும். மகா வாக்கியம் என்ற பகுதியில் தத்துவ மசி எனவும் சிவாத்து விதம் எனவும் அருமறை