பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு

449

களிற் கூறப்படும் சித்தாந்த நுண்பொருள் விரித்துரைக்கப் படுகின்றது. வாய்மைவழி நின்று தன்னையறிந்திடும் தத்துவ ஞானிகள், அவாவறுத்து இறைவன்பால் எல்லே யற்ற பத்தியுடையராய்ச் சிவயோகத்தின் முடிந்த நிலையில் நிற்குந் திறத்தினை விளக்குவன. இத் தந்திரத்தினுள் வாய்மை, ஞானி செயல், அவச வறுத்தல், பத்தியுடைமை சோதனை என்ற தலைப்புக்களில் அமைந்த திருமந்திரப்

பாடல்களாகும்.

மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்மிகப் பொய்கலந்தாருட் புகுதாப் புனிதனை க் கைக்லந்தாவி யெழும்பொழு தண்ணலைக் கைகலந்தார்க்கே கருத்துறலாமே.

தன்னையறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே,

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனே டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட வாய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட வானந்த மாமே.

அடியா ரடியா ரடியார்க் கடிமைக் கடியளுய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியா ரருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண்டானே.

ஆன் கன்று தேடி யழைக்கு மதுபோல் நான்கன் ருய் நாடி யழைத்தேனென் நாதனை வான் கன்றுக் கப்பாலாய் நின்ற மறைபபொருள்

ஊன் கன்ரு குடிவந் துள்புகுந் தானே.

முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி மெய்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்ருேர் பரானந்த போதரே. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின் பத் தம்மா னடிதந் தருட்கட லா டினுேம் எம் மாய மும் விடுத் தெம் மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே,

(260i)

(2611)

(2615)

(2624)

(2627)

(2633)

(2635)

எனவரும் திருமந்திரத் திருப்பாடல்கள் உணர்ந்து

போற்றத்தக்கனவாகும்.

23