பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

பன்னிரு திருமுறை வரலாறு


இந்நூலின் முடிவிலுள்ள ஒன்பதாந்தந்திரம், தச காரியத்துள் ஒன்ருகிய சிவபோகம் என்னும் பேரின்ப நிலையை விளக்கும் முறையில் அமைந்துள்ளது. ஈண்டுச் சிவபோகம் என்றது, உயிர் யோகத்தாற் சிவத்துடன் கூடிய நிலையில் தன்னை மறந்து அம் முதல்வனது பேரரு ளில் திளைத்து இன்புறுதலாகிய சிவசாயுச்சிய நிலையினை. இத் தந்திரம் குருமடதரிசனம் என்பது முதலாகச் சர்வ வியாபி என்பதிருக இருபத்திரண்டு உட்பிரிவுகளையுடைய தாகும். இதன்கண் கூறப்படும் குருமடதரிசனம், ஞானகுரு தரிசனம், திருக்கூத்துத் தரிசனம், ஆகாசப்பேறு, ஞானே தயம், சத்திய ஞானனந்தம், சொருப உதயம், சிவ தரிசனம், சிவருப தரிசனம் என்னும் பகுதிகள், சிவயோகியர்களின் அநுபவ நிலைகளைக் குறிப்பன ஆகும். பிரணவ சமாதி, தூல சூக்கும அதி சூக்கும பஞ்சாக்கரங்கள், மோனசமாதி என்னும் பகுதிகள், எல்லாப்பொருள்களையுந் தன்னகத்தே அடக்கியுள்ள திருவைந்தெழுத்தினை அவ்வத்தானங்களில் வைத்துத் தியானிக்கும் நிலையிற் சிவபோகத்து அழுந்துந் திறனைத் தெளிய அறிவுறுத்துவன ஆகும். திருவைந் தெழுத்தினைக் குறித்துத் திருமூல தேவர் இந்நூலில் அறி வுறுத திய உண் ைமகள், உண்மை விளக்கம், சிவப்பிர காசம், திருவருட்பயன் முதலிய மெய்கண்ட நூல்களில் எடுத்தாளப்பெற்று உள்ளமை உணர்ந்து போற்றத் தக்க தாகும். திருக்கூத்துத்தரிசனம் என்ற பகுதி சைவத்தின் மிகச்சிறந்த நுண்பொருள்களை விளக்குவது. இதில் சிவானந்தக் கூத்து என்றது. சிவஞானிகள் என்றும் தம் மெய்யுணர்வினிற் கண்டு அநுபவிக்கத்தக்க நித்தியமாகிய ஆனந்தக் கூத்தாகும். இதன் நுட்பத்தினை,

பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த பொன் சடை பின்றயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலி கொன்றையம முடியிய்ை கூடலாலவாயிலாய் நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே. (3-52–6) என வரும் திருப்பாடலில் ஆளுடையபிள்ளையாரும்,

குறியொன்றுமில்லாத கூத்தன்றன் கூத்து (திருவாசகம்) எனத் திருவாதவூரடிகளும் குறித்துப் போற்றியுள்ளமை ಒ ಹಹಹಹಹ.. பக்குவமுடைய சிவஞானிகளுக்குச் சிறப்பு முறையில் நிகழ்த்தப்பெறும் இத்திருக்கூத்தினை பன்றி, உலக உயிர்கள் யாவும் நலம்பெற்றுய்தல் வேண்டும்