பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் - 31.

சென்ற தூதர்கள், வாதவூரரையனுகி மன்னனது ஒலை யினைப் படித்துக் காட்டிஞர்கள். வாதவூரடிகள் இறை வன் திருமுன்பு சென்று வணங்கித் தென்னவன் எழுதிய ஒலையிலுள்ள வாசகங்களை எடுத்துரைத்தார். அதனைச் செவிமடுத்த சிவபெருமான், வாதவூரடிகளை நோக்கி நாடெல் லாம் மதிக்க நாமே நல்ல குதிரைகளைக் கொண்டு சென்று பாண்டியனுக்கு அளித்து மீள்வோம். நீ தூதருடன் சென்று மன்னனைக் கண்டு ஆவணி மூல நாளிற் குதிரைகள் வரும் எனக் கூறுவாயாக என மொழிந்து மன்னவன் மகிழ வாதவூரடிகளே முன்பு போல் மந்திரிக் கோலஞ் செய்து அவர் கையில் விலை மதித்தற்கரிய மாணிக்க மணி யொன் றைத் தந்து இம்மனியினைக் கையுறையாகக் கொடுத்துப் பாண்டியனைக் காண்டாயாக ' எனக் கூறியனுப்பிஞர். அவ் வாறே மதுரையை யடைந்த வாதவூரர், மன்னனை யணுகி மாணிக்க மணியைக் கையுறையாகத் தந்து, ஆவணி மூல நாளிற் குதிரைகள் வந்து சேரும் எனக் கூறினர். சினந் தணிந்த மன்னன், வரிசைகள் நல்கி அடிகளை அவரது மாளி

கையிற் செல்லப் பணித்தான்.

அமைச்சர்களுள் ஒருவன், பாண்டியனை யணுகி, வாத ஆரர் கூறியனவெல்லாம் பொய் யெனக் கூறிஞன். உண்மை யுணர விரும்பிய மன்னன், பெருந்துறையிற் குதிரைகள் உள்ளனவா என்பதை விரைவில் அறிந்து வந்துரைமின் ' எனத் துரதர்களை ஏவிஞன். துரிதர்கள் பெருந்துறையிலும் அதனைச்சார்ந்த இடங்களிலும் குதிரைகளைக் காணுது மீண்டு வந்து அரசனிடம் தெரிவித்தார்கள். அது கேட்டு வெகுண்ட பாண்டியன், நமக்கு அமைச்சனுகி இடர் செய் யும் வாதவூரனத் தண்டித்து நம் பொருள் முழுவதையும் அவனிடமிருந்து வாங்குமின் ' எனத் தண்டலாளரை நோக்கிக் கூறின்ை. வர்கள் வாதவூரடிகளைச் சிறையில்

f *،سیہہ 妥 இத்

4. W、 :bبه دام به - - צ * அடைத்தனர். மறுநாட் காலே கடுவெயிலில் நிறுத்தித் துன் புறுத்தினர்கள். இளைப்புற்று வருந்திய வாதவூரடிகள், தம்மையாட் கொண்டருளிய இறைவனே நினைந்து ' எங்கள் பெருமானே, மன்னனுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் நமது கடமையாகும்’ எனக் கூறிய சொல்லம் பொய்யாகுமோ எனப் புலம்பி முறை" அவர் கூறிய மாற்றமெல்லாம் புக்கன.