பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பன்னிரு திருமுறை வாலாறு

வாதவூரடிகளது துயரத்தைப் போக்க எண்ணிய சில: பெருமான், நரிகளெல்லாம் குதிரைகளாகவும் தேவர்கள் குதிரை வீரர்கனாகவும் திருவுளங்கொண்டார். உடனே நரிகள் குதிரைகளாகி வந்து கூடின. தேவர்கள் குதிரை வீரர்களாகி வந்து குழுமினர். இறைவன் குதிரை வாணிக ராய் வேதக் குதிரையின் மீதமர்ந்து குதிரைத் திரளுடன் மதுரைக்கு எழுந்தருளிஞர். குதிரைத் திரள்வரக் கண்ட நகரமாந்தர், அரசனிடம் சென்று தெரிவித்தனர். அச் செய்தி கேட்டு மகிழ்ந்த பாண்டியன், வாதஆார்பால் அன்பு டையணுகி அவரையழைத்துச் சிறப்புச் செய்து குதிரைத் திரள் காண வருவீராக எனக் கூறிச் சிவிகையிலேறிச் செண்டுவெளியை யடைந்தான். குதிரைச் சேவகளுக வந்த இறைவனேக் கண்ட வாதவூரடிகள், பண்ணியதவப் பயன் பரியின் மீது நண்ணியது என வியப்புற்ருர். பாண்டி யன் வாதவூசரை நோக்கி ஆரிய வணிகரை இவ்வீதியிலே குதிரை நடத்திக் காட்டுமாறு சென்று கூறுமின் என்ருன். அடிகளும் குதிரைத் தலைவரை யணுகி, முகமன் கூறி மன்ன னது விருப்பத்தைத் தெரிவித்தார். குதிரைச் சேவகராய் வந்த இறைவர், மன்னன் வியந்து காணும் வண்ணம் குதிரையை நடத்திக் காட்டி ஞர். அதனேக் கண்டு மகிழ்ச்சி யுற்ற பாண்டியன் பொன் னுடையைப் பரிசாக வழங்கிஞன். குதிரைத் தலைவராய் வந்த இறைவர் அவ்வாடையைச் செண்டினுல் ஏற்ருர். தான் அளித்த பொன்னுடையைக் கையினுல் வாங்கி முடிமிசைப் புனைந்து கொள்ளாத குதிரைச் சேவகனது செயல் கண்டு பாண்டியன் சினமுற் ருன். அரசனது வெகுளி நிலையினைக் குறிப்பாலுணர்ந்த வாதவூரர் அஃது அவர் நாட்டு வழக்கம்’ எனக் கூறி மன்ன னது சினத்தைத் தணிவித்தார். பசியிலக்கணம் வினவிய பாண்டியனுக்குக் குதிரை வாணிகராய் வந்த இறைவர் அவற்றை விளக்கிக் கூறிக் குதிரைகளைக் கயிறு மாறிக் கொடுத்தார். குதிரைகளெல்லாம் பந்திவிற் கட்டப் பெற் றன. குதிரை வாணிகராய் வந்த இறைவர் திருவாலவாய்க் கோயிலை யடைந்தார்.

அன்றிரவில் இறைவனது அருள் விளையாட்டால் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறி முன்னுள்ள பழைய குதிரைகளையும் கடித்து வ்ருத்திக் கூக்குரலிட்டு ஓடி மதுரை நகரத்தார்க்குத் துன்ப முண்டாக்கின. இதனே யுணர்ந்து