பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவனதஆசடிகள் 器影

சினமுற்ற பாண்டியன், வாதவூரரைக் கடுவெயிலில் நிறுத்தி நம்முடைய பொருளெல்லாவற்றையும் குறைவற வாங்கு மின் எனத் தண்டலாளரை ஏவிஞன். அவர்கள் வாத ஆரரை வெயிலில் நிறுத்தித் துன்புறுத்தினர்கள். வாத ஆசடிகள், சோமசுந்தரக் கடவுளே நினைந்து முறையிட்டார். அடிகளது துயரத்தைப் போக்கத் திருவுளங் கொண்ட இறைவர், கங்கையை நோக்கி நீ வைகையிற் சென்று ஒவாதவூாரது துன்பத்தைப் போக்குவாயாக’ என ஏவினர். வைகையிற் பெருவெள்ள முண்டாயிற்று. வைகையாறு உடைப்பெடுத்தமையால் அதன் வெள்ளம் மதுரை நகரத் துட் புக்கது. நகரமாந்தர் மனங்கலங்கினர். பாண்டியன் வைகைக் கரையை யடைந்து பொன்னும் மணியும் முத்தும் நறுமலரும் தூவி வைகை நதியை வணங்கி அன்னையே நின் சினந்தணிதல் வேண்டும்’ என வேண்டி நின்ருன். வெள்ளப் பெருக்கு சிறிதும் குறையவில்லை. அரசனுக்குக் கவலை பெரிதாயிற்று. " எம்பெருமாளுகிய திருவாலவா யிறைவனது திருக்கோயிற் பூசை முட்டுப்பாடுற்றதோ ? தவச்செல்வர்கள் மனம் வருந்த யாம் தீமை செய்த துண்டோ ? சொல்லுமின்.” எனத் தன் அருகிலிருந்த அமைச்சர்களை வினவிஞன். அமைச்சர்கள் மன்னனைத் தொழுது நின்று, அரசே, சிவனடிக்கு அன்பராகிய திருவாதவூரடிகளைக் கடுவெயிலிலிருந்து விடுவித்து மகிழ் வித்தால் இவ்வெள்ளப் பெருக்கு தணியும் எனக் கூறி ஞர்கள். பாண்டியனும் வாதவூரடிகளை யழைத்து உபசரித் துத் தன் பிழைகளைப் பொறுத்தருளும்படி வேண்டினன். வெள்ளப் பெருக்கால் நமது மதுரை நகரம் சிதைவுருதபடி நற்றவத் தலைவராகிய நீரே வைகையாற்றின் உடைப்பினை அடைப்பித்தருளல் வேண்டும் எனக் குறையிரந்தான். விருப்பு வெறுப்பில்லாத வாதவூரடிகள், வைகைப் பெருக்கு தணியுமாறு இறைவன் திருவடிகளைச் சிந்தித்தார். குதிரைச் சேவகளுகி வந்த இறைவனது திருக்கோலத்தையே நினைந்து வானை நோக்கி வணங்கினர். அந்நிலையில் வெள் ளப்பெருக்கு குறைவதாயிற்று. பின்னர்ப் பறை அறை வித்து நகர மக்கனை பழைத்து அவரவர்கள் அடைக்க வேண் டிய நிலப்பகுதியை அளந்து அறிவித்தனர். மக்களை