பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

பன்னிரு திருமுறை வரலாறு


தேவர் முதலிய யாவராலும் அறிதற்கரிய சிவபரம் பொருள் உயிர்கட்கு அருள் செய்தல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிவந்து பாசங்களை நீக்கி மெய்யுணர்வு அளித்தருள் வான் என்பது சிவநெறிச் செல் வர்களது துணியாகும். இக் கருத்து,

குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுனர் வற்றதோர் கொவே. (1581) எனவரும் திருமந்திரத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளமை காணலாம். இவ்வுண்மையினை,

அகளமா யாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தாளுகத் தந்ததென் றுந்தீபற ’ (திருவுந்தியார் - 1) எனவரும் பாடலில் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனரும்,

" அகனமய மாய் நின்ற அம்பலத்தெங் கூத்தன்

சகளமயம் போலுலகில் தங்கி - நிகளமாம் ஆணவ மூல மலமகல ஆண்டான்காண் மாணவக என்னுடய்ை வந்து ’

(திருக்களிற்றுப் படியார் - 4) என வரும் பாடலில் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனரும் விளக்கியுள்ளனர். திருவுந்தியார் திருக்க ளிற்றுப் படியார் ஆகிய இவ்விரு நூல்களும் திருமூல நாயனர் அருளிய திருமந்திரத்திற் கூறப்படும் சிவாதுபவ உண்மைகளை விரித்து ரைக்கும் அநுபூதி நூல்களாகும்.

சிவஞானம் பெற்ற நல்லுயிர்கள் தன் முனைப்பு அற்றுச் சிவபரம்பொருளோடு வேறற ஒன்றி நிற்கும் இயல்பினை விளக்குவது,

வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம் வித்தும தன் அங்குசமும் மெய்யுணரில் - வித்த தனிற் காணுமையாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணுமை யாலற்ருர் பேறு. (திருக்களிற்றுப்படியார் - 57) என வரும் திருப்பாடலாகும். விதையினுள் ளே முளை யென்று ஒரு முதல் வெளிப்படாது ஒன்ருயடங்கியிருத்தல் போன்று சிவஞானம் பெற்ற ஆன் மாக்களும் தாம் என் ருெரு முதன் மைகெடச் சிவபரம் பொருளிடத்திலே வேறற அடங்கியிருப்பார்கள் என்பது இதன் பொருளாகும். இது,