பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பன்னிரு திருமுறை வரலாறு


மதுரை நகரிற் பிட்டு விற்றுப் பிழைப்பவளும் சிவபெரு மான்பால் பேரன்புடையவளும் நரை மூதாட்டியுமாகிய செம் மனச் செல்வி யென்பாள், தனக்கு அளந்த கரையினை அடைத்தற்குரிய ஆளின்றி வருந்தித் திருவாலவாய்த் திருக்கோயிலை யடைந்து இறைவன் பால் தன் குறையைச் சொல்லி முறையிட்டாள். அவள் நிலைக்கிரங்கிய சிவபெரு மான் மண்வெட்டியுங் கூடையுங் கொண்டு கூலியாளாக அவள்முன் தோன்றி, அவள் அளித்த பிட்டினை வாங்கி யுண்டு, அவளுடன் வைகைக் கரையை யடைந்து அவளுக்கு இட்ட பங்கினை அடைக்கத் தொடங்கித் தான் மேற்கொண்ட வேலையைச் செய்யாது ஆடிப்பாடிப் பொழுது போக்கிளுர். கூவியாளாகிய இறைவரை நோக்கி ஒன்றுஞ் சொல்ல மாட் டாத பிட்டு வாணிச்சி, அரசன் அதிகாரிகள் கண்டால் என்ன நேருமோ ' என அஞ்சி நடுங்கி தின் ருள். அவளது மனநிலையை யுணர்ந்த இறைவர் அன்னையே, கவலைப் படாது நினது வீட்டிற்குச் செல்வாயாக. உனக்கு அளந்த பங்கை நான் விரைவிலடைத்து விட்டு இதோ வருகிறேன் . என உறுதி சொல்லி அனுப்பிவிட்டுக் கொன்றை மரத்தடி யிற் கூடையைத் தலைக்கனையாக வைத்துத் துயில் கொண் டார். அந்நிலையில் வாதவூரரது ஏவலால் கரையினைக் கண் காணிக்க வந்த அதிகாரி, எல்லாப் பங்கும் அடைபட்ட நிலை யிலும் பிட்டு வாணிச்சியின் பங்கு அடைபடாது வெள்ளத் தாற் சிதைவுறுதல் கண்டு வெகுண்டு அவளுடைய கூலி யாளை இங்குக் கொணர்க எனப் பணித்தான். ஏவலனுெரு வன் அக்கூலியாளே யிழுத்து வந்து அவன் முன் நிறுத்தி ஞன். வெகுளி மிக்க தலைவன் இவனேக் குருதிசோர அடித்திடும்' எனக் கூறினன். அது கேட்டு அருகே நின்ற வன்களுளன் ஒருவன் பிரம்பினுல் ஓங்கியடித்தான். கூலி யாளாக வந்த இறைவர், அங்குள்ளார் திடுக்கிடும்படி விரைந்து மறைந்தார். அவர்மேற் பட்ட அடியானது அரசன், அரசியர், அமைச்சர் முதலிய அனைவர் மேலும் பட் டது; வாதவூரடிகள் மேலும் பட்டது; நிற்பன நடப்பன வாகிய எல்லாவுயிர்கள் மேலும் பட்டது.

அஃதுணர்ந்த வாதவூரடிகள், உயிர்க்குயிராகிய இறை வரே இங்ங்ணம் கூலியாளாக எழுந்தருளினுர் என்றிசங்கிக் கம்பிதமுங் கண்ணிரு முடையராஞர். அந்நிலையில் அவர் முன் அதிகாரிகள் விரைந்து வந்து இறைவனுடைய