பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

பன்னிரு திருமுறை வரலாறு


சுத்தமெய்ஞ்ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம ஒத்துரு குற்றமெல்லாம் உற்றிடும் உயிரின் கண்ணே சத்துள போதே வேரும் சதசத்தும் அசத்தும் எல்லாம் வைத்திடும் அநாதியாக வாயுநீர் லவனம் போலும்

'சிவஞான சித்தியார்-251)

என்னும் சித்தியார் செய்யுளாகும். தண்கடல் நீருப்புப் போல் ' என மெய்கண்டாரும், வாரி நீர் லவணம் போலும் என அருணந்தி சிவாசாரியாரும் காட்டிய இவ் உவமை, பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் வியாபக வியாப் பியங்களாய் நிற்குமாறு உணர்த்தியதாகும். கடலும் நீரும் உப்பும் ஒருங்குகூடிய நிலையிலும் உப்பானது கடலிலுள்ள நீரைப் பொருந்துவதன்றி அந்நீர்க்குஇடகிைய கடற்பரப் பினைப் பொருந்தாதவாறுபோலப் பாசமும் உயிரைப் பொருந்தி நிற்பதன் றி உயிர்க்குச் சார்பாகிய இறைவனைப் பொருந்தாது என்பது இவ்வுவமையால் அறிவுறுத்தப்படும் கருத்தாகும். இவ்வுவமை,

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரஞ் சேர்பரமும் விட்டுக் கப்புறு சொற்பத மாளக் கலந்தமை எப்படி யப்படி யென்னுமவ் வாதே (2945)

என்னும் திருமந்திரப் பாடற்பொருளை உளங்கொண்டு கூறியதாதல் உணர்தற் பாலதாகும்.

சுட்டியறியப்பட்ட இப்பிரபஞ்சத்தை, இது மெய்ப் பொருளன்று. இது மெய்ப் பொருளன்று ' என்று இவ்வாறு ஒவ்வொன்ருக வைத்து நோக்கி, மெய்ப் பொருளன்று எனக் கழித்து நீக்கி, அவ்வாறு கண்டு நீங்கிய ஆன்மா வாகிய தன்னறிவின் கண்ணே சுட்டுணர்வு இன்றி நின்ற கடவுளை ஆராய்ந்து, அது நானுனேன் ' என ஒருவன் பாவிப்பாளுயின், அப் பாவனையால் வேறன்றியுடனய் விளங்கித் தோன்றும் முதன் வனது அருளால், தொன்மை யே கூடிநின்ற தனது பொதுவியல்பைத் தான்விட்டு நீங்க வல்லவைன். இவ்வாறு உயிர் தன்னுடன் வேறன்றித் தோன்றும் முதல்வனருளால், தான் பாசப்பிணிப் பினின்றும் நீங்குதல், ஒள்ளிய கருடதியானத்தில் விளங்கித் தோன்றும் கருடனுல், தியானிப்போகிைய பாவகன் பாம் பின் விடத்தைத் தீர்த்துக்கொள்ளுமாறு போலாம். இக் கருத்தினை விளக்கும் நிலையிலமைந்தது,