பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 494

  • ஒத்துறுபாசம் மலம் ஐந்தொ டாருறு, தத்துவ பேதம் ” (டிை-2211) எனவும், நந்தியராவத்தை நாடச் சுடர் முனம், அந்தி யிருள் போலும் ஐம் மலம் மாறுமே (டிை 2293) எனவும் திருமந்திரப் பனுவலில் முதன் முதற் காணப்படுவதாகும்.

ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங் கள்தோறும் அருளிச் செய்த ஆகமங்களிலெல்லாம் கூறப் பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிபுகள் எல்லா ஆகமங்களி னும் ஒத்துச்சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கி முடியும் என்பது,

  • சுத்த வடி வியல்பாகவுடைய சோதி

சொல்லிய ஆகமங்களெல்லாம் சூழப்போயும் ஒத்துமுடி யுங்கூட ஓரிடத்தே

ஒருபதிக்குப் பலநெறிகள் உளவாளு ற்போல்

(சிவஞான சித்தியார் பர பக்கம்-9) எனவரும் அருணந்தி சிவாசாரியார் வாய்மொழியால் நன்கு உணரப்படும். இவ்வுண்மை

ஒன்றது பேரூர் வழியா றதற்குள் என்றது போல இருமுச் சமயமும் (1558) எனவரும் திருமந்திரத் தொடரில் விளக்கப்பெற்றிருத்தல் காணலாம்.

அறிவிற் சிறந்தோரும் அறிவற்றயர்வோரும் ஆகிய இவர்கட்கன்றி, அறிவும் அறியாமையும் ஒருங்குடை யார்க்குப் பயன்படும் நோக்கத்துடனேயே நூல்கள் இயற்றப்படும் என்பதனை,

போதமி குத்தோர் தொகுத்த பேதைமைக்கே

பொருந்தினுே ரிவர்க்கன் றிக் கதிப்பாற் செல்ல ஏதுநெறிஎனும் இவர்கட் கறிய முன்குள் இறைவன் அருள்நந்திதனக் கியம்ப

(சிவஞான சித்தியார் பரபக்கம்-10) என வரும் திருவிருத்தத்தில் அருணந்தி சிவாசாரியார் தெளிவாகக் குறித்துள்ளார். இக்கருத்து,

அறிவிக்க வேண்டாம் அறிவற் றயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே. (2327) என வரும் திருமந்திரப் பாடலில் இடம் பெற்றிருத்தல் கூர்ந்துணரத்தக்கதாகும்.