பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

பன்னிரு திருமுறை வரலாறு


பேருறக்கநிலையில் கொப்பூழ் இடமாக இரண்டு கருவி களும், துரியாதீதம் எனப்படும் உயிர்ப்படக்க நிலையில் மூலம் இடமாக ஒரு கருவியும் நிற்கும் என்பர். உயிர் கருவிகளோடு கூடி அறியும் நிலையில் உள்ள அவத்தை

நிலைகளாகிய இவற்றை,

ஒன்றனையா மூலத் துயிரனையும் நாபியினில் சென்றனையும் சித்தம் இதயத்து - மன்றவே ஐயைந்தாம் நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு.

(சிவஞானபோதம்-வெண்பா-28) எனவரும் சிவஞான போதமும்,

சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினிற், கனவு தன்னில் ஆக்கிய இருபத்தைந்து களத்தினில், சுழுனை மூன்று நீக்கிய இதயந்தன்னில், துரியத்தில் இரண்டு நாபி, நோக்கிய துரியாதீதம் நுவலின் மூலத்தின் ஒன்றே.

(சிவஞானசித்தியார்-சுபக்-228) என வரும் சிவஞான சித்தியாரும் வகைபெறக்கூறியுள்ளன, இங்குக் கூறப்பட்ட அவத்தை நிலைகளை விளக்கும் முறையில், சிவஞானசித்தியார் உரையாசிரியராகிய மறைஞானதேசிகர்,

முப்பதோ டைந் தாய் முதல்விட்டங் கையைந்தாய் செப்பதின் மூன்ருய்த் திகழ்ந்திரண் டொன்ற தாய் இப்பதி நின்ற இயல்பை யறிந்தவர் அப்பதி நின்றமை ஆய்ந்துகொள் ளீரே. (2443) இந்திய மீசைந் தீரைந்து மாத்திரை மந்திர மாய் நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே. (2144) மனவகத்தே...... இருபத் ைதஞ்சதாமே. சுழுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்றன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து விழுமப் பொருளுடன் மேவி நின் ருனே. (2156) கருவரம் பாகிய காயந் துரியம் இருவரும் கண்டிடிற் பிறப்பிறப் பற்றவர் 2 குருவரம் பெற்றவர் கூடிய பின் னை

இருவருமின்றி யொன்ருகி நின்ருரே. (2280)

1. இப்பாடல் முழுவதும் கிடைக்கவில்லை. 2. மறைஞான தேசிகர் கொண்ட பாடம்.