பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

பன்னிரு திருமுறை வரலாறு


அறிவிலன் அமூர்த்தன் அசாகாதி சேரான் குறியொன் றிலான் நித்தன் கூடான் கலசதி செறியுஞ் செயலில்லோன் திண்கர்த்தா அல்லோன் கிறியின் மலன் வியாபி கேவலத் தோனே. (2247) எனவரும் திருமந்திரத்தின் சொல்லையும் பொருளையும் அவ்வாறே அடியொற்றியமைந்திருத்தல் காணலாம்.

ஆன்மா உடல் கருவி முதலியவற்றைப் பெற்றுப் போகம் நுகர்ந்து ஓரளவு அறிவு விளங்கப் பெற்ற நிலையா கிய சகலத்தின் இயல்புரைப்பது,

உருவினைக் கொண்டுபோக போக்கியத் துன்னல் செப்பல் வருசெயல் மருவிச் சத்த மாதியாம் விடயந்தன்னில் புரிவதுஞ் செய்திங் கெல்லா யேர்னியும் புக்குழன்று திரிதரும் சகலமான அவத்தையிற் சீவன் சென்றே. (229)

என்னும் சிவஞான சித்தியாராகும். இஃது,

உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று மருவுற்றுப் பூத மகுதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணுஞ் சகலத்தே. (2261) எனவரும் திருமந்திரப் பொருளை விரித்துரைப்பதாகும்.

உயிரானது குருவின் திருவருளைச் சார்ந்து தூய்மை பெறும் நிலையாகிய சுத்தாவத்தையினை விளக்குவது,

இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்திதோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத் திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம் பெருகி நாயகன் றன் பாதம் பெறுவது சுத்தமாமே, (230) என்னும் சிவஞான சித்தியார் செய்யுளாகும். இஃது.

இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி குருவென வந்து குனம்பல நீக்கித் தரும் அரன் ஞானத்தால் தன் செயலற்ருல் திரிமலம் நீங்கிச் சிவளுதல் சுத்தமே (1527. 2262.)

எனவரும் திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறை யில் அமைந்ததென்பது, இச்செய்யுளுரையில் மறை ஞான

1. அறிவின் றிமுத்தன் எனத் திருமந்திரம் அச்சுப் புத்தகங் களில் உள்ள பாடம் பிழைபட்டதாகும். அறிவிலன் அமூர்த்தன் எனச் சிவஞான சித்தியார் மறை ஞான தேசிகர் உ ையிற் கண்ட பாடமே திருந்திய பாடமாகும் என்பது இங்கு எடுத்துக் காட்டிய ஒப்புமைப் பகுதியால் இனிது புலனுதல் அறிக.