பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற திருமந்திரப் பாடற்கு அமைந்த விரிவுரை போன்றி ருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

சூரியனது சந்நிதியளவிலே சூரியகாந்தக் கல்லில் நெருப்பு விளங்கித் தோன்றுமாறு போல, ஞானுசிரியன் முன்னிலையிலே மாளுக்கனுள்ளத்தே சிவஞானம் விளங்கித் தோன்றும். அது தோன்றவே பதி பசு பாசம் ஆகிய முப் பொருள்களின் இயல்புகளும் நன்கு விளங்கும் என அறிவுறுத்துவது,

சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய

சுடர் தோன்றியிடச் சோதி தோன்றுமாபோல் ஆரியளும் ஆசான் வந் தருளால் தோன்ற

அடிஞானம் ஆன்மாவில் தோன்றும், தோன்றத்

தூரியனும் சிவன் தோன்றும் தானுந் தோன்றும்

தொல்லுலக சொல்லாந்தன் னுள்ளே தோன்றும்

நேரியனுய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்

நின்ற நிலை யெல்லாம் முன் நிகழ்ந்து தோன்றும் :280)

எனவரும் சிவஞான சித்தியார் செய்யுளாகும். இது

சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் :ோலச் சூரிய காந்தஞ் சூழ் பஞ்சைச் கடமாட்டா சூரியன் சன்னிதியிற் சுடுமாறுபோல் ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே. (117)

எனவரும் திருமந்திரத்தின் சொற்பொருள்களை அவ்வாறே

அடியொற்றியமைந்துள்ளமை காணலாம்.

ஆசிரியனது அருள்நோக்கத்தால் இருவகைப் பாசங் களும் நீங்கிக் கேட்கும்முறையில் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து அன்புசெய்து அருள் வழியடங்கி நிற்கும் இயல்பினர்க்கு இறைவனியல்பு கேட்கும் காலத்துப் பொருட்டன்மைபற்றிப் பேதமாய்த்தோன்றியும் சிந்திக்குங் காலத்துக் கலப்புப்பற்றி அபேதமாய்த் தோன்றியும், தெளிந்தபின்னர் இவ்விரண்டுமின்றி நுண்ணியனும் பரியனுமாயதேசச் முறைமையற்றி எவற்றி னும் ஒற்றித்து நின்றே ஒன்றிலுந் தோய்விலளுய்ப் பேதாபேதமாய்த் தோன்றியும் நிற்கும் அம்முதல்வனது தன்மை இனிது விளங்கும் என இவ்வாறு தெளிதலின் இயல்பினை உணர்த்துவது,