பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவர் நீங்கள் வருந்துதல் தவிர்மின். இக்குருத்தமர நீழலில் தெய்வபீடம் அமைத்து அதன்மீது நம்திருவடிகனே வைத்து வழிபட்டிருப்பீராக. இத் திருத்தமாம் பொய்கையின் நடுவே ஒருநாள் தீப்பிழம்பு வந்து தோன்றும். நீவிச் யாவரும் அத்தழலில் மூழ்கி நம்மையடைந்து மகிழ்மின் எனக்கூறித் தம்முடன் தொடரும் அடியார்களை நில்லுமின்' என நிறுத்திக் கயிலையை நோக்கிப் புறப்பட்டார். அவரைப் பிரிந்திருக்கலாற்ருத வாதவூரடிகள், அவரை மீண்டுத் தொடர்ந்தார். அடிகளது வருத்தத்தினைப் போக்கக்கருதிய இறைவர். அங்குள்ளதொரு கொன்றைமர நீழலிற் சிறிது பொழுது தாமதித்திருந்து வாதவூரடிகளை அருகே அழைத்து நாம் எல்லாவுலகத்தும் யாண்டும் நீக்கமறத்தங்கியிருப்போ மாயினும், அன்பராகிய அடியார்களது வினைத்தொடர்பகற்றி ஆட்கொள்ளுதல் வேண்டி இத்திருப்பெருந்துறையிற் குருந்த மர நீழலிலே எப்பொழுதும் எழுந்தருளியிருப்போம். இங்குச் சூக்குமநாதவொலியாகிய சங்கநாதமல்லது பிற வாத்தியங்கள் நமக்கு ஆகா. நீ அடியார்களுடன் குருந்தடி யில் நம்மை வழிபட்டிருப்பாயாக. திருத்தமாம் பொய்கையில் தோன்றும் தீயுள் அடியார்கள் புகும்பொழுது நீயும் உடன் புகாது இத்தலத்தை விட்டு நீங்கித் திருவுத்தரகோச மங்கையையடைந்து அங்கே சித்திகளெல்லாம் பெற்றுச் சிவ லிங்கத் திருமேனி கொண்டுள்ள திருத்தலங்களிலெல்லாம் இக்குரு வடிவத்தையே கண்டு மகிழ்வாயாக. பின் திருக்கழுக் குன்றத்தை வணங்கி அங்கிருந்து மீண்டும் தென்றிசை நோக்கிவந்து தில்லையிற் பொன்னம்பலத்தை வணங்கிப் புத்தர்களை வாதில் வென்று நம்திருவடிப் பேற்றினைப் பெற்று இன்புறுவாய் எனப்பணித்தருளினர். இங்கனம் வரந்தரவிருந்தபெருமானை வாதவூரடிகள் வணங்கி நின்று எம்பெருமானே பெருந்துறை நகரிலன்றிப் புலியூர்ப் பொன்னம்பலத்தே முத்திபெறுவை என்று அடியேற் கருளியது எவன் கருதி ?’ என விஞவிஞர். புழுவானது தான் எடுக்கப்பட்ட இடத்தின்கனன்றி வைக்கப்பட்ட இடத்திலேயே வேட்டுவனகிய குளவியின் வடிவத்தைப் பெறும். அதுபோல இப்பெருந்துறையிலே தினக்கு மெய்ஞ் ஞானத்தை யுபதேசித்தேம், சிவாதுபூதியாகிய பரமுத்தி உனக்குத் தில்லையம்பலத்திலே யுண்டாகும்’ எனக்கூறித் தில்லைப்பதியின் சிறப்பின யெடுத்துரைத்து வாதவூரடி