பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிைெராந் திருமுறை 50.9

விளங்குதல் பதினுெராந் திருமுறைக்கமைந்த தனிச்சிறப் பாகும். கடைச்சங்கப் புலவராகிய நக்கீரர் முருகப்பெரு மான்டால் அன்பர்களை ஆற்றுப்படுத்திப் பாடியதும் பத்துப் பாட்டுள் முதலாவதாக விளங்குவதுமாகிய திருமுரு காற்றுப்படை இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பதினெராந் திருமுறை ஆசிரியர்களுள் காலங்கடந்து என்றுமுள்ளவர் திருவாலவாயுடையாராகிய சிவபெருமான வர். காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனுர், சேரமான் பெருமாள் நாயனர் ஆகிய இம்மூவரும் சுந்தார் பாடிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதி கத்திற் போற்றப் பெற்ற அடியார்களாவர். இவர்களுள் காரைக்காலம்மையாரென்பவர் தேவார ஆசிரியர் மூவர்க் கும் காலத்தால் முற்பட்டவர். ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் நாவுக்கரசர் சம்பந்தராகிய இருவர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவர். சேரமான் பெருமாள் நாயனர் தம்பியாரூர ராகிய சுந்தரர்க்குத் தோழராய் அவரோடு திருக்கயிலை சார்ந்தவர், ஏனை எண்மரும் சுந்தர் காலத்திற்குப்பின் கி. பி. பத்தாம் நூற்ருண்டு முடிய அமைந்த காலப்பகுதி யில் வாழ்ந்தோராவர். ஆகவே இப்பெருமக்கள் பாடிய திருப்பாடல்களைத் தன் பாற்கொண்டு திகழும் இப்பதி ளுெராந்திருமுறை கி.பி. ஐந்தாம் நூற்ருண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்ருண்டு முடியவுள்ள காலப்பகுதியிற் சிவநெறி யும் செந்தமிழும் பெற்ற வளர்ச்சியை அறிந்துகொள்ளுதற் குப் பெரிதும் துணைபுரியுமென்பது திண்ணம்.

இத்திருமுறையிலமைந்த நாற்பது பிரபந்தங்களில் முழுமுதற்பொருளாகிய சிவபெருமானைப் போற்றிய பிரபந் தங்கள் இருபத்தைந்தாகும். சிவபெருமான் அருளிய இளைய பிள்ளையாராகிய முருகப்பெருமானைப் போற்றுவது திருமுருகாற்றுப்படையென்ற பாடல். தன்னை வழிபடும் அடியார்களின் இடர் தீர்த்தல் கருதிச் சிவபெருமான் தோற்றுவித்தருளிய மூத்த பிள்ளையாராகிய யானைமுகக் கடவுளைப் போற்றுவன மூத்தநாயனர் திருவிரட்டை மணி மாலை, மூத்த பிள்ளை யார் திருமும்மணிக்கோவை, விநாய கர் திருவிரட்டை மணிமாலை என்ற மூன்று பிரபந்தங்களும். ஏனைப் பதிைெரு பிரபந்தங்களும் இறைவனது திருவருள்