பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

பன்னிரு திருமுறை வரலாறு


பெற்ற திருத்தொண்டர்களாகிய சிவனடியார்களின் சிறப் பினை விரித்துரைப்பனவாகும், இறைவனுக்கு ஆட்பட்ட தன் பயன் அவனடியார்களுக்குத் தொண்டுபட்டுய்தலே யென்பது நம்பியாரூரர் முதலிய திருவருட்செல்வர்களின் துணியாகும். இத்துணியினை விளக்குதற் பொருட்டே சிவனடியார் பெருமையினை விரித்துரைக்கும் இப்பதினுெரு பிரபந்தங்களும் இத்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளன. சிவனருளாற் செயற்கரிய செய்து சிவநெறி வளர்த்த திருத்தொண்டர்களின் வரலாற்றினை விரித்துரைக்கும் பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்திற்கு இன்றியமையாத வரலாற்றுச் செய்திகள் இப்பதினொரு நூல்களிலும் வகைபெற விளக்கப்பெற்றுள்ளன. அடியார் பெருமையினை விளக்கும் இப்பிரபந்தங்களைப் பன்னிரண் டாந்திருமுறையாகிய திருத்தொண்ட புராணத்திற்கு முன் பதினுெராந் திருமுறையின்கண் தொகுத்துதவிய சான்ருேரது உளக்குறிப்பு உணர்ந்து இன்புறத்தக்க தாகும்.

அந்தாதி, இரட்டை மணிமாலை, உலா, கலம்பகம், மும்மணிக்கோவை, நான் மணி மாலை, எழுகூற்றிருக்கை எனப் புதுவது புனைந்த யாப்புப் பற்றியும், வெண்பா, விருத்தம், கலிவெண்பா எனச் செய்யுள் வகை பற்றியும், காரெட்டு, ஒருபா ஒருபது, ஏகாதச மாலை, திருவீங்கோய் மலேயெழுபது என எண் பற்றியும், ஆற்றுப்படை, கோபப் பிரசாதம், கண்ணப்ப தேவர் திருமறம், திருமுகப் பாசுரம், திருத்தொகை எனப் பொருள் வகை பற்றியும், பெருந்தேவ பாணி என இயலிசை பற்றியும் பெயரெய்திய பிரபந்தங்கள் இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இங்கெடுத்துக் காட்டிய பிரபந்த வகைகள் சிலவற்றுக்குரிய மூல இலக்கிய மாக இப்பதினுெராந்திருமுறை விளங்குகின்றது. இதன் கண் தொகுக்கப்பெற்ற நாற்பது நூல்களிலும் உள்ள பாடல்களிற் சிதைவுற்றனபோக இப்பொழுது கிடைத் துள்ளவை ஆயிரத்து நானூற்று முப்பது திருப்பாடல்

களாகும்.

இத்திருமுறையைத் தொகுத்துதவியவர். இதன் இறுதிக்கண் அமைந்த திருநாரையூர் வி ந | ய கர் திரு விரட்டைமணிமாலை முதலாகத் திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலையீருகவுள்ள பத்துப் பிரபந்தங்களையும்