பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

14 பன்னிரு திருமுறை வரலாறு

பேரன்பின் கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பாண பத்திரர், வேந்தர் பெருமானே என்னுடைய சுற்றத் தாரைப் பேணு தற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள் பால் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது திருவாலவாய்ப் பெருமானது ஆணை. ஆதலால் அரசாட்சி யும் அதற்கு இன்றியமையாத உறுப்புக்களாகிய படை முதலிய அங்கங்களும் ஆகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டருளுதல் வேண்டும் என்று கூறிச் சேரர் பெருமானை வணங்கினர். இறைவரது ஆணையெனப் பாண பத்திரர் கூறியதனக் கேட்ட சேரமான் பெருமாள் அவ்வானையை மறுத்தற்கு அஞ்சிப் பத்திரரது வேண்டு கோளுக்கு உடன்படுவாராயினர். பாணபத்திரரும் தமக்கு வேண்டிய பெரும் பொருளையேற்றுக்கொண்டு சேர மன்னர் பால் விடைபெற்று யானைமீதமர்ந்து மதுரையையடைந்து இறைவனை இன்னிசையாற் பரவிப் போற்றியிருந்தார் என்பது வரலாறு. இதனைச் சேக்கிழார் சுவாமிகள் கழறிற் றறிவார் நாயனர் புராணத்துள் 26 முதல் 38 வரையுள்ள செய்யுட்களில் விரித்துக் கூறியுள்ளார். பெரும்பற்றப்புலி யூர் நம்பி பாடிய திரு விளையாடற் புராணத்தில் திருமுகங் கொடுத்த திருவிளையாடல் என்ற படலத்திலும், பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணத்தில் திருமுகங் கொடுத்த படலத்திலும் இவ்வரலாறு புனைந்து கூறப் பெற்றுள்ளது. பாணபத்திரர் பொருட்டு இறைவனே விறகாளாய்ச் சென்று மதுரைத் திருவீதியில் விறகு விற் றுழன்று சாதாரிபாடி வடபுலத்துப்பாணனைத் தோற்ருேடச் செய்தனனென்றும், ஒரு நாளிரவு பெருமழை பெய்யவும் அதனைப் பொருட்படுத்தாது ஆலவாய்ப் பெருமானைப் பாணபத்திரர் பாடி நின்றராக, அவர் கையிலேந்திய யாழ்க் கருவியின் நரம்பு மழைநீரால் நெகிழ்ந்து கட்டழி யாதபடி ஆலவாயிறைவன் அவர்க்குப் பொற்பலகையிட்ட ருளினனென்றும், பாணபத்திரருடைய கற்பிற் சிறந்த மனைவியார் பாடினியார்க்கும் பாண்டியனது ஆதரவு பெற்ற பாடினியொருத்திக்கும் நிகழ்ந்த இசைவாது நிகழ்ச்சியில் இசை நலந்தெரிந்து கூறும் நடுவனுக ஆலவாயிறைவனே அமர்ந்து உண்மை கூறினுனென்றும் பெரும்பற்றப்புலியூர் நம்பியும் பரஞ்சோதி முனிவரும் தாம் பாடிய நூல்களில் விரித்துக்கூறியுள்ளார்கள்.