பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

பன்னிரு திருமுறை வரலாறு

மலிபுரிசை மாடக் கூடற்பதி ' எனச் சிறப்பித்தார். குற் றங்கள் நீக்கிக் குணங்கொண்டு பாராட்டுதலாலும் வெண் ணிறணிதலாலும் அன்னப் பறவையைப் போன்று உள்ளும் புறமும் பால் போலுந் தூய்மையாளராகிய மெய்யடியார்கள் இடைவிடாது குழுமி இறைவனை வழிபாடு செய்து போற்றுமிடமாக விளங்குவது மதுரையிலுள்ள திருவால வாய்த் திருக்கோயிலாதலின், அங்கு என்றும் நீங்காது நிலைபெற்றிருப்பது எனது குடிவாழ்க்கை யென்பார், * பால் நிற வரிச்சிறகு அன்னம் பயில் பொழில் ஆலவாயின் மன்னிய சிவன்யான் ' என்ருர், சிவன்யான் மொழி தரு மாற்றம் என்றது, சொல் நிகழ்ச்சிக்கு இடனுகிய தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் இடவரம்பின்றி உயிர்க் குயிராய் யாண்டும் நீக்க மறக்கலந்து விளங்கும் இறைவன் சிவனுகிய யான் என்று தன்னைத் தன்மையிடத்தில் வைத் துக் கூறிப் புறத்தேதோன்றிப் படர்க்கையிலுள்ளாரோடு உரையாடுமளவுக்குத் தன்னடியார் பொருட்டு எளிவந் தருளிய அருட் பண்பினைப் புலப்படுத்துவதாகும்.

கைம்மாறு கருதாது பொழிதல் மாரியின் இயல்பாயி னும் அவ்வியல்பு பருவகாலமாகிய கார்காலத்திலன்றி ஏனைக் காலங்களில் மாரியின்பால் மாருது காணப்படுவ தில்லை. சேரமான் பெருமாளாகிய வேந்தர் பெருமானே பருவ காலத்து மழைமேகத்தைப் போன்று பாவலர்க்கு உரிய காலத்தில் வேண்டும் பொருள்களை அவர்கள் கேளா முன் உரிமையுடன் வரையாது வழங்கும் பெருங் கொடை யாளராய் மன்னுயிர்க்கு நிழல் தரும் அளியும் இகல் தீர்க் கும் சேனையுமுடையராய்த் திகழ்கின்ருரென்பார், பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு, உரிமையின் உரிமை யின் உதவி ஒளிதிகழ், குருமா மதிபுரை குலவிய குடைக் கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் என அவ்வேந்தர் பெருமானுடைய கொடையும் அளியும் தெறலும் முதலிய புகழ்த்திறத்தை விரித்துப் பாராட்டினர். மக்களும் மற்றைய அஃறிணை யுயிர்களும் தம்முள் உரையாடுங்கால் அவ்வுயிர் கள் கூறிய குறைகளெல்லாவற்றையும் நன்குனர் ந்து எவ்வுயிர்க்கும் இடரகற்றி இன்பஞ் செய்யும் சேரமான் பெருமாளது அரசியல் மாண்பினை அவரது குடைமேலேற்றி ஒளி திகழ் குருமா மதிபுரை குலவியகுடை யென அதற்குக் குளிர்ந்த நிலவொளி வீசுந் திங்களை உவமை கூறிச் சிறப்