பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

பன்னிரு திருமுறை வரலாறு


அவனை நின்னுட்டிலேயே இருத்திவிடுதல் கூடாது என அறிவுறுத்துவார், மாண்பொருள் கொடுத்து என்ற அளவிலமையாது மாண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே என்றும் பணித்தருளினர். வேந்தர் பெருமாளுகிய நின்பாலமைந்த உயர்ந்த குண நலங்களில் ஈடுபட்ட பாணபத்திரன் நின்னைப் பிரிந்து மீண்டும் என்பால் திரும்பி வருதலை மறந்து ஆண்டுத் தங்கினும் தங்கிவிடுவான், அவனது யாழிசையிலும் பேரன்பிலும் ஈடுபட்ட யான் அவனைக் கணப்பொழுதும் பிரிந்துறைதல் இயலாது. ஆகவே அவன் வேண்டிய பொருளை அவனுக்குக் கொடுத்து அவனை உடனே மதுரைக்கு மீளும் படி செய்வதும் தினது கடமையாமென்பார் கொடுத்து விடுப்பது' என்ற அளவிலமையாது கொடுத்து வர விடுப்பதுவே என அறிவுறுத்தருளினமை உய்த் துணர்வார்க்குப் பெரிதும் சுவை பயப்பதாகும்.

இன்ன தன்மையன் என யாவராலும் உணரமுடியாத இறைவன், தன்னை இன்னிசையாற்போற்றிய பாண பத்திர ரது வறுமைத் துயாை நீக்கிப் பெருஞ்செல்வம் வழங்குதற் பொருட்டும் தன்னை இடைவிடாது வழிபடும் சே ரமா ன் பெருமாளாகிய வேந்தர் பெருமானுடைய வரையா ஈகையினையும் சிவபத்தியினையும் விளக்குதற் பொருட்டும் தண்ணுர் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில் தானும் ஒரு தமிழ்ப்புலவகைத் திருமேனிகொண்டு தோன்றி, மதிமலிபுரிசையென்ற இத் திருமுகப் பாசு ரத்தைப் பாடிக்கொடுத்தான் என்ற வரலாறு, அடியார்க் கெளிய பெருமாளுகிய அவ்விறைவனது அருமையிலெளிய அழகினை இனிது விளக்குவதாகும். நாடு மொழி முதலிய கட்டுப்பாடு எல்லாவுலகத்துக்குந் தலைவனகிய இறைவ னுக்கு என்றும் இல்லை. எனினும் ஆட்கொள்ளுதற்குரிய மக்கள் அப்பிரிவின் வழியுள்ளார்கள். அவர்களை உய்வித்தற் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு எழுந் தருளும் இறைவனும் அவர்களுள் ஒருவனுக நடித்து அவர்கள் பேசும் மொழியிற் பேசியும் எழுதியும் செய்யுள் முதலியன இயற்றியும் நட்புக்கொண்டு உறவாடி உலக மக்களுக்கு ஞானம் உண்டாக்கி நலம் புரிகின்ருன். இவ் வுண்மையை விளக்கும் சிறந்த இலக்கியமாக இத்திருமுகப் பாசுரம் விளங்குகின்றது. தில்லைவாழந்தணர்தம் அடி