பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கா இலம்மையார் 52;

யார்க்களித்தது போக எஞ்சியிருந்த மற்ருெரு கணியைக் கொண்டு வந்து வைத்து உண்ணச் செய்தார். அப்பழத் தினை நுகர்ந்த பரமதத்தன், அதன் இனிய சுவையில் அடங்காத வேட்கையுடையவனுகி, இதனையொத்த சுவை யும் மணமுமுடைய மற்ருெரு.பழம் உளது, அதனையுங் கொண்டுவந்து ைவ ப் ப ய க எனப்பணித்தான். கணவனது சொல்வழியொழுகும் கற்பிற்சிறந்த புனிதவதி யார், கணவனுற் குறிப்பிடப்படும் மாங்கனியைத் தாம் முன்னமே அடியார்க்கு அளித்திருந்தும் அதனைக் கணவ னுக்கு உரைப்பின் அவனது சுவையுணர்வைக் கெடுத்த தாக முடியுமென்று அஞ்சி, அவன் சொல்லிய மாங்கனியை எடுத்துக்கொண்டு வரச்செல்பவர்போல் மனையினுள்ளே சென்று ஒரு புறம் நின்று வருந்தினர் : அன்புடையார்க்குத் துன்பம் வந்து ற்ற காலத்து அத்துன்பத்தைத் துடைத்து வேண்டுவன புரிந்துதவும் சிவபெருமானுடைய திருவடி களைத் தம்மனத்துட் சிந்தித்துப் போற்றினர். அந்நிலையில் இறைவனது திருவருளால் அவர் கையகத் தே சுவை மிக்க தொரு மாங்கனி வந்தமர்ந்தது. அதனைக் கொணர்ந்து கணவனுடைய உண்கலத்திலே மகிழ்ச்சியுடன் படைத்தார். அதனையுண்ட நிலையில் அதன் சுவை தேவரமிழ்தினும் மேற்பட்டமையுணர்ந்த பரமதத்தன், இது முன் நான் தந்த மாங்கனியன்று. இது மூவுலகங்களிலும் பெறுதற் கரியது. இதனை நீ வேறு எங்கே பெற்ருய் ' எனத் தம் மனைவியாரை நோக்கி வினவிஞன். அதனை க் கேட்ட புனிதவதியார், அருளேயுருவாகிய இறைவனது செம்மை நெறியிற் பொருந்திய திருவருட் செயல் பிறர்க்கு விளங்க எடுத்துரைக்கும் எளிமையதன்று என்பது கருதி அதனைத் தம் கணவனுக்குச் சொல்லமாட்டாமலும், உயிரினுஞ் சிறந்த ஒழுக்கத்தின்பாற்பட்ட தமது கற்பு:மேம்பாட்டிகு லும் கணவனது சொல்வழியொழுகாமை நல்வழியன்று என்னுங் கருத்தினுலும் நிகழ்ந்தது கூறுதலை விடுதற் கியலாமலும், இவ்விருநிலையினும்பட்டு நடுக்கமுறுவாராயி னர். முடிவில் நடந்தபடி சொல்லுவதே கடனென்று துணிந்த புனிதவதியார், சிவனடியாரொருவர் பசியால் வருந்தி வீட்டிற்கு வந்ததும் கறியமுது சமைக்கப்படாத நிலையில் திருவமுதுடன் மாம்பழத்தில் ஒன்றை அவர்க்குப் படைத்ததும், இணையதொரு பழம் இன்னும் உளது அதனையிடுக எனக் கணவன் கூறிய ஆணையை நிறை