பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பன்னிரு திருமுறை வரலாறு


திருவடிகளையிறைஞ்சி நின்று மெய்தானரும்பி ப்ெனத் தொடங்கும் திருச்சதகத்தைப் பாடிப்போற்றினர். முன், சிவபெருமான் அருளியதனை மனத்தின்கண் நினைந்து திருப்பெருந்துறையினின்றும் புறப்பட்டுத் திருவுத்தர கோசமங்கையெய்தி இறைவனது திருக்கோயிலிற் புக்கு அங்குக்குருவடிவத்தைக் காணுது வருந்தி நீத்தல் விண்ணப் பத்தைப் பாடிஞர். அப்பொழுது இறைவன் அடிகளுக்கு ஆசிரியத்திருமேனி காட்டி அருள் புரிந்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் தெய்வத்திருத்தலங் கள் பலவற்றையும் தரிசித்துக் கொண்டு சோழநாட்டை யடைந்து இடைமருதுறையும் பெருமான இறைஞ்சிப் போற்றிஞர், திருவாரூர் இறைவனைப் பணிந்து திருப்புலம் பல் பாடினர். சீகாழிப்பதியைப் பணிந்து பிடித்த பத்தினைப் பாடிப் பரவிஞர், திருக்கழுக்குன்றத்தை வணங்க எண்ணித் தில்லைப் பதியைத் திசைநோக்கித்தொழுது திருமுதுகுன்றம், திருவெண்ணெய் நல்லூரருட்டுறை முதலிய தலங்களைப் பணிந்து திருவண்ணுமலையை அடைந்தார். அங்குள்ள மாதர்களெல்லாம் மார்கழித்திங்களில் திருவாதிரைக்கு முன் பத்துநாள் தொடங்கி வைகறைப்பொழுதில் துயிலெழுந்து மனேகள் தோறும் சென்று மகளிரைத்துயிலெழுப்பி அன வரும் ஒன்றுகூடிச் சிவபெருமானது மெய்ப்புகழைப்பாடிப் பொய்கையில் நீராடியது கண்ட வாதவூரடிகள், அம் மகளிர் கூறுவதாகத் திருவெம்பாவையை அருளிச் செய்தார். அவர்கள் விளையாட்டில் கூறும் கூற்ருகத் திருவம்மானை பாடிஞர். காஞ்சி நகரடைந்து திருவேகம்பம், காமக்கோட்டம் ஆகிய திருக்கோயில்களை இறைஞ்சித் திருக்கழுக்குன்றை அடைந்தார். அங்கே இறைவர் பெருந்துறையிற் காட்டிய குருமேனிகொண்டு காட்சி தந்தருளிஞர். அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அடிகள், திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினர். பின் தில்லைப் பதியை யடைந்து தில்லைச் சிற்றம்பலவன் ஆசிரியத்திருமேனி காட்டி அருள்புரியக் கண்டு ஆனந்தக் கண்ணிர் சொரியக் கண்டபத்துப் பாடி ஓவியம்போல் அசைவற்று நின்ருர். இவ்வாறு நெடுநேரம் தன்வசமிழந்து நிற்கும் வாதவூரடிகளைக்கண்ட கோயில் மெய்காவ்லர் அடிகளைப் பித்தரெனத்தவருகக் கருதிப், 'பொன்னம்பலத்தை விட்டு வெளியே செல்லும் ' எனக்

ந்துரைத்தனர். நன் புலனென்றி நின்ற அடிகளது