பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ள் ரைக்கால க்iைமல்:என். 怒2器

களுக்கு அளித்தருளும் அருட்சத்தியாகிய மலேமகளார் புனிதவதியாாது அன் பின் திறத்தைக் கண்டு வியந்தருளி இறைவனை நோக்கி எம்பெருமானே, தலையினுல் நடந்து இம்மலைமேல் ஏறிவரும் எற்புடம்பின் அன்பின்திறம் என்னே என வினவினுர். அது கேட்ட சிவபெருமான் உமையே இங்குவரும் இவள் நம்மை அன்பிற்ை பேணும் அம்மையாவாள். இப்பெருமை பொருந்திய பேய்வடிவத் தையும் நம்பால் தானே வேண்டிப் பெற்றனள் என்று சொல்லி அருகு வந்தணைந்த புனிதவதியாரை நோக்கி, 'அம்மையே என்னும் செம்மொழியால் உலகமெல்லாம் உய்ய அழைத்தருளினர். அருட்கடலாகிய இறைவன் அம்மையே யென்று அழைக்கக் கேட். புனிதவதியார் அப்பா என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடி களில் வீழ்ந்து வணங்கினர். இறைவன் அவரை நோக்கி நம்பால் இங்கு வந்து நீ வேண்டிப் பெறக் கருதியது யாது ' என வினவக் காரைக் காலம்மையாரும் இறைவனைப் பணிந்து அறக்கடலாகிய பெருமானே நின் திருவடிக்கண் குறையாத பேரன்பு என்பாலமைதல் வேண்டும். எனது பிறவி நோய் ஒழிதல் வேண்டும். மீண்டும் வினை வயத்தால் எனக்குப் பிறப்பு நேருமாயின் நின்னை மறவாது போற்றும் மெய்யுணர்வினை அடியேற்கு வழங்கியருளுதல் வேண்டும். நீ திருநடனஞ் செய்யும் பொழுது யான் நினது திருவடிக் கீழ் இன்புற்றிருத்தல் வேண்டும் எனவேண்டிப் போற்றி ஞர். அம்மையார் வேண்டியன வெல்லாம் அவர் க்குக் கூடுமாறு அருள் செய்த இறைவன், அம்மையாரை நோக் கித் தென்னுட்டிற் சிறப்புற்று விளங்குந் திருவாலங் காட்டில் யாம் ஆடியருளுந் திருக்கூத்தினைக் கண்டு நீ என்றும் எம்மைப் பாடிப் போற்றியிருப்பாயாக’ எனப் பணித் தருளினர். . அம்மையார் கயிலைப் பெருமான் பால் விடை பெற்றுத் தென் டைடைந்து திருவாலங் காட்டிற்குத் தலையால் நடந்து சென்ருர், அண்டமுற நிமிர்ந்தாடும் ஆலங்காட்டிறைவனது திருக்கோலத்தைக் கண்டு உள முருகி வழிபட்டுக் கொங்கைதிரங்கி யென்ற முதற்குறிப் புடைய மூத்த திருப்பதிகத்தையும் எட்டியிலவம் என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தையும் பாடிப் போற்றி ஞர். கண்ணுதற் பெருமான் இனிய தமிழால் அம்மையே யென அழைக்கப்பெற்ற காரைக் காலம்மையார் ஆலங்காட்

டடிகளது தூக்கிய திருவடிக்கீழ் என்றும் நீங்காதுறைந்து