பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

பன்னிரு திருமுறை வரலாறு


அப்பெருமானைப் பாடிப் போற்றும் பெருவாழ்வைப் பெற்ருர் என்பது வரலாறு. இதனைச் சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத்தில் அறுபத்தைந்து திருப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்கள்.

" அப்பனை அணிதிருவாலங் காட்டுள் அடிகளைச் செடி தலைக் காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் எனக் கொங்கை திரங்கி யென்ற முதற் குறிப்புடைய மூத்த திருப்பதிகத்தின் இறுதிப் பாடலாகிய திருக்கடைக் காப் பிலும், ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே, காடுமலிந்த கனல்வா யெயிற்றுக் காரைக் காற்பேய் தன் பாடல் என எட்டியிலவம்’ என்ற திருப் பதிகத்தின் திருக்கடைக் காப்பிலும், உரையில்ை இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினுற் காரைக் காற்பேய் சொல்' என அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளிலும் அம்மையார் தம்மைக் காரைக்காற் பேய் எனக் குறித் துள்ளார்கள். இங்கெடுத்துக் காட்டிய அகச்சான்றுகளால் அம்மையார் பிறந்தருளிய திருப்பதி சோழ நாட்டிலுள்ள காரைக்கால் என்னும் ஊரென்பதும், அவர்க்கு வழங்கிய பெயர் பேயார் என்பதும் நன்கு புலனுகும். நம்பியாரூரர் தாம் பா டி ய திருத்தொண்டத் .ெ த ைக யி ல் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் என அம்மையாரைப் பேயார் என்ற பெயராற் போற்றி யுள்ளமையால், காரைக்காலம்மையார் க்குப் பேயார் என்ற பெயர் பெருக வழங்கின மை புலனுகும். பேயார் என்னும் இப்பெயர் இவருடைய பெற்ருே.ரிட்ட இயற்பெயரன்றென் பதும், இவர் இல் வாழ்க்கையிற் பற்றற்று இறைவனை வழி படும் நற்கணத்தி லொன் ருய காலத்துப் பெற்ற காரணப் பெயரென்பதும், மற்ருெருகண் நெற்றிமேல் வைத் தான் றன் பேயாய, தற்கணத்தி லொன் ருய நாம் என அம்மையார் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்ளுதலால் நன்கு துணியப்படும். காரைக்காலம்மையார்க்குப் பெற்ருேர் இட்ட பெயர் புனிதவதியார் என்பதும், அவர்க்கு அம்மையார் என வழங்கும் இப்பெயர் திருக் கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமாளுல் இட்டழைக்கப்பெற்ற சிறப்புப்பெய ரென்பதும் சேக்கிழா டிகள் பாடிய திருத் தொண்டர் புராணத்தில் காரைக்காலம்மையார் புராணத் தால் நன்கு விளங்கும். இவர் பேய்வடிவம் பெற்றனர்