பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் 537

என்றது, உடலில் தசை மிகவுங் குறைந்து போக ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக எற்புடம்பினராக நிலவினர் என்பதை உணர்த்துவதாகும்.

காரைக்காலம்மையார் இறைவனை வேண்டிப்பெற்ற பேய் வடிவம், பேராசையால் விரும்பியவற்றை நுகரப் பெருது அலைந்து திரியும் அழுக்குடைய உயிர்களுக் கமைந்த இழிதகவிற்ருகிய பேய் வடிவம் அன்றென்பதும், சிவபெருமானைச் சூழ்ந்து நின்று பரவிப் போற்றும் தூய்மை வடிவினராகிய பதினெண் கணங்களுளொன் ருகிய மேன் மையுடையதென்பதும் விளங்க, வசனமும் மண்ணு மெல்லாம் வணங்கு பேய் வடிவம்’ எனச் சேக்கிழார் பெருமான் சிறப்பித்துப் போற்றுகின் ருர், இவ்வுண்மை மற்ருெருகண் நெற்றி மேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தி லொன் ருய நாம் ' என முன்னர்க் குறித்த அம்மையார் வாய்மொழியாலும் இனிது புலனுதல் காண்க.

அம்மையார் தளர்நடை கொண் டு விளையாடும் பிள்ளைமைப் பருவத்திலேயே சிவபெருமானது திருவடித் தொண்டில் ஈடுபட்டு அப்பெருமானுடைய திருப்பெயர் களைப் பயின்ற திறத்தைப்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானுேர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர் எனவரும் அற்புதத் திருவந்தாதிப் பாடலால் நன் குணரலாம்.

மனையறக் கடமையாகிய விருந்தோம்பலும் சமயவழி பாடாகிய அடியார்ப் பேணலும் சிவனடியார்க்குத் திருவமு தளித்தலாகிய இவ்வொரு செயலாலே நிறைவேறுமென் பது புனிதவதி யாரது துணிபாதலின், கணவன் கொடுத் தனுப்பிய மாங்கனியிலொன்றை அடியார்க்கு அளித்தனர். அன்புடையார்க்குத் துன்பம் வந்து ற்றகாலத்து அதனை அறவே நீக்கி வேண்டுவன புரிதல் இறைவனது இயல் பென்பது புனிதவதியார்க்கு இருமுறை மாங்கனி தந்துத் விய அருட் செயலால் இனிது பெறப்படும். முதன் முறை யிற் புனிதவ தியார் இறைவன்பாற் பெற்றுத் தந்த பழத் தினை இது திருவருளாற் கிடைத்ததே என்னும் ஆராய்ச்சி