பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

பன்னிரு திருமுறை வரலாறு


வின்றித் தான் அனுப்பிய கனியாகவே பரமதத்தன் கரு தினமையாலும், சிவனடியார்க்கு உணவாகிய அவனது பொருள் மீண்டும் பயன் வகையால் நுகரப்படுதல் முறை யாதலாலும், அஃது அவனுக்கு உணவாயிற்று. இரண்டாம் முறையாக வேண்டிப் பெற்ற கனி, பரமதத்தன் இறைவ னது திருவருளே ஐயுற்றுச் சோதித்தற் பொருட்டு மீண்டும் மனைவியாரைக் கொண்டு வேண்டிய நிலையில் அவனது ஐயத்தைத் தீர்த்த லொன்றேகருதி அளிக்கப்பட்ட தாகலின், அவனது நுகர்ச்சி யொடுபட்ட ஆராய்ச்சிக்கு அகப்படாது காணுகல் மறைந்து விட்டது. புனிதவதி யாரது திருவருட் பேற்றினை நேரிற் கண்டுணர்ந்த பரம தத்தன் அவரைத் தன் மனைவியாகக் கருதாது வேருெரு தெய்வமென்றே கருதி விலகி யொழுக நினைத்தது வியப் பென்னும் மெய்ப்பாடாகும்.'

சிவநெறிச் செல்வராகிய திருஞானசம்பந்தப் பிள்ளை யார் திருவாலங்காட்டிறைவரை வழிபடச் சென்றபொழுது காரைக்காலம்மையார் தலையாலே நடந்து போற்றும் சிறப் புடைய அம்மையப்பர் திருவாலங்காடாம் இதுவென நினைந்து அம்மூதூரினை மிதிக்க அஞ்சி அதன் மருங்குள்ள தோர் ஊரில் அன்றிரவு துயில் கொண்டனரென்றும், அந்நிலையில் ஆலங்காட்டில் எழுந்தருளிய இறைவர் ஆளுடைய பிள்ளையார் கனவில் தோன்றி நம்மைப் பாடு தற்கு மறந்தனையோ என வினவி நின்ருரென்றும், இறைவ னது திருவருளே இதுவெனவுணர்ந்த ஆளுடைய பிள்ளை யார் நள்ளிரவில் துயில் நீங்கி யெழுந்து துஞ்ச வருவார் என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடி ஆலங் காட்டடிகளைப் போற்றி ைரென்றும் சேக் கிழாரடிகள் திருஞானசம்பந்தர் புராணத்திற் கூறியுள்ளார்.” இச் செய்தி துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப் போய், நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் எனவரும் இத் திருப்பதிகத்தின் முதற் பாடலாலும், ஆந்தண்

1. தொல்காப்பியனர் காமக் குறிப்பாகாதன இவை யென விலக்கிய மெய்ப்பாடுகளுள் இவ்வியப்பும் ஒன்ருகும் வியப்பு - தலை மகள் பால் தெய்வத்தன்மை கண்டான் போல் வியந்தொழுகுதல் ' என்பர் பேராசிரியர். (தொல் . மெய்ப். 26 ம் சூத்திாவுரை)

2. பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் 1008, 1909, 1010-ஆம் செய்யுட்கள்,