பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

பன்னிரு திருமுறை வரலாறு


காரைக்காலம்மையார் அருளிச் செய்தனவாகத் திரு வாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் திரு விரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதியென்ற பிரபந் தங்கள் இரண்டும் ஆக நான்கும் பதினுெராந்திருமுறை யில் முறையே தொகுக்கப் பெற்றுள்ளன. திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகமாகிய கொங்கைதிரங்கி ' என்ற முதற் குறிப்புடையபதிகம் பதினெரு பாடல்களாலியன்றது. இவ்வாறே எட்டியிலவம் என்ற இரண்டாந் திருப்பதிக மும் பதினெரு பாடல்களையுடையதாகும். இப்பதிகங்கள் இரண்டிலும் பதினுெராந் திருப்பாடலாக அமைந்த செய் யுட்கள் இரண்டும் இப்பதிகங்களைப் பாடியோர் பெயரும் இவற்றைப் பாடும் அடியார்கள் பெறும் பயனும் கூறும் திருக்கடைக்காப்புச் செய்யுளாகும். இத்திருக்கடைக் காப்பு நீங்கலாக ஒவ்வொரு திருப்பதிகத்திலும் பத்துப் பாடல்களே அமைந்துள்ளன. இவற்றைக் கூர்ந்து நோக்குங்கால் பத்துப் பாடல்களால் இயன்றனவற்றைப் பதிகமென்ற பெயரால் வழங்குதல் அம்மையார் காலத்துத் தோன்றி நிலைபெற்ற வழக்கமாதல் நன்கு புலனும்.

கொங்கைதிரங்கி யென்ற முதற் கு றி ப் பு ைட ய திருப்பதிகம் நைவளம் என்ற நட்டபாடைப்பண்ணிலும் எட்டியிலவம்’ என்ற பதிகம் இந்தளம் என்ற பண்ணிலும் பாடப்பெற்றுள்ளன. எனவே இப் பண் சுமந்த பாடல் களைப் பாடிய காரைக்காலம்மையார் இ ய ற் ற மி லு ம் இசைத்தமிழிலும் நிரம்பிய புலமையுடையாரென்பது நன்கு துணியப்படும். நம்பியாரூரரால் திருத்தொண்டத் தொகை யிற் போற்றப் பெற்ற அடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், காரைக்கலம்மையார் ஆகிய இம்மூவரும் கற்கும் இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் வல்லவர்க ளென்பது கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம் மூவர் கற்கும் இயல் இசைவல்லோர் எனவரும் சேக்கிழார் புராணத்தாற் புலகுைம். திருஞானசம்பந்தர் முதலிய தேவார ஆசிரியர்கள் பதிகப்பெருவழியால் இறைவன் திரு வருளைத் தமிழகமெங்கும் பரப்புதற்குமுன் பண்ணுர்ந்த பாடல்களால் இறைவனைப் பாடிப் போற்றும் திருநெறிய தமிழ் நெறியை முதன்முதல் தோற்றுவித்த அருள்ாசிரியர்

1. சேக்கிழார் புராணம் 46.ம் செய்யுள்.