பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

பன்னிரு திருமுறை வரலாறு


தால் தாம் காணப் பெற்று மகிழ்ந்த திறத்தை உய்த்துணர வைத்தமை நினைந்து போற்றத்தக்கதாகும்.

திருவிரட்டை மணிமாலையென்பது, கட்டளைக் கலித் துறை முன்னும் வெ ண் பா பினனுமாக முறையே தொடர்ந்து அந்தாதித் தொடையால் மாலைபோன்றமைய இருபது செய்யுட்களால் இயற்றப்பெறுவதாகும். இதனை ஆய்ந்தசீர் இரட்டைமாலையந்தாதி எனச் சேக்கிழா ரடிகள் குறிப்பிட்டுள்ளார்கள். இ ர ட் ைட மணிமாலை யென்ற பிரபந்தத்தை முதன் முதற் பாடியவர் காரைக்கா லம்மையாரேயாவார். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிற் கட்டளைக் கலித்துறையென்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவன காரைக்காலம்மையார் பாடிய இத்திருவிரட்டை மணிமாலையிலுள்ள கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் பத்துமேயாகும்.

இவ்வுலக வாழ்விற் கொடிய துன்பங்கள் வந்து தாக்கும்பொழுது உளந்தளராது ஈசனை யே வாழ்த்துதல் வேண்டும். ஈசனுகிய அவனையன்றி இவ்வுலகத்து எதுவும் இயங்காதெனவுணர்ந்து மறவாது போற்றும் அடியார்களை இறைவன் மீண்டும் பிறவாவண்ணம் காத்தருள் புரிவான். அவன் அடியார்களது இடர்கண்டு தரித்திருப்பானல்லன். தன்னைத் தஞ்சம் புகுந்தார் துயர்க்கடலில் அழுந்தா வண் ணம் எளிவந்து காத்தருளும் வல்லாளனுகிய அப் பெருமான நெஞ்சத்தால் இடைவிடாது சிந்தித்துப் போற்றுதல் வேண்டும். படைத்தற் கடவுளும் ஆதிரை முதல்வனுகிய அவ்விறைவனைச் சோதித்துக் காண மாட்டாது ஆற்ற கில்லேன் அம்மா என்று தளர்ந்து வரு ந் தி னு ன். எண் தோளிசனகிய இறைவனுடைய பொன னடிகளைப் பணிந்து போற்றுவோர் கடலேயனைய துன்பங்கள் அத்தனையுந் தள்ளிக் கடந்து ஈறில்லாத இன்பக்கரையெய் தி மகிழ்வர். எல்லா மந்திரங்களினும் மேலi ன திருவைந்தெழுத்திை ஒதித் தலையாயின உணர்ந்தோர் ஈசை கழல் கண்டுணர்வர். அத்தகைய மெய்யடியார்களைப் போற்றியவரது உடம்பின் நிழலைக் கண்டபோதே வினைகளெல்லாம் நில்லாதொழியும், அங்ங்னமாகவும் மலர்தூவி வழிபடும் அடியார்களது பழி

1. பெரிய, காரைக்காலம்மையார் புராணம் 53-ம் செய்யுள்,