பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் 533

வினை நில்லாதெனச் சொல்லவும் வேண்டுமோ ? தொல்லை வினை வந்து நம்மைச் சூழ் தற்குமுன் கூற்றுவனே க் காய்ந்த பெருமான நினைந்து அன்பு செய்து அவனது திரு நாம மாகிய திருவைந்தெழுத்தினை ஒதி யின்புறுதல் வேண்டும். உத்தமராய் வாழ்வார்கள் இறந்த பின்னர்ப் பட்டமரமாகிய விறகினை யடுக்கிச் சுடுவர் உலகத்தார். அத்தகைய சாக் காடு வருதற்கு முன்னரே ஒரு வரும் உண்ணுத நஞ்சை யுண்டு உலகத்துயிர்களைக் காத் தருளிய சிவபெருமானது பொருள் சேர் புகழைக் கேட்டுச் சிந்தித்துப் போற்றுதல் வேண்டும் என்பனபோன்ற உயர்ந்த கருத்துக்கள் இத் திருவிரட்டை மணிமாலையில் விரித்துரைக்கப்

பட்டுள்ளன.

முனியத்தக்க அவுனர்களுடைய முப்புரங்களையும் ஒரம்பினுல் தீ முட்டியழித்து உயிர்களுக்கு இன்பமளிக்க வல்ல எம்பெருமானே, நீ நினது நீண்ட சடையிற் பிறரறி யாது வைத்தி குக்கும் கங்கையாகிய நங்கையை நின் திரு மேனியின் ஒரு பாகத்திலுள்ள உமை நங்கை கண்டால் நின துகள் ளத்தை எங்ங்னம் மறைப்பாய் ' என இறைவனை நோக்கிக் காரைக்காலம்மையார் வினவுவதாக அமைந்தது,

இனிவார் சடையினிற் கங்கையென்பாளே அங்கத்திருந்த கனி வாய் மலை மங்கை காணில் என் செய்தி ைகயிற் சிலையால் முனிவார் திரிபுரம் மூன்றும் வெந்தன்று செந்தியின் மூழ்கத் தனிவார் கனையொன்றினல் மிகக் கோத்தளம் சங்கரனே' என்ற பாடலாகும்.

வங்கமலி கடல் நாகைக்கா ரோனத்தெம் வானவனே எங்கள் பெருமாளுேர் விண்ணப்ப முண்டது கேட்டருளிர் கங்கை சடையுட் காந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை நங்கை யறியிற் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே எனத் திருநாவுக்கரசடிகளார் பாடிய திருவிருத்தம் இப் பாடற் பொருளை யடியொற்றியமைந்திருத்தல் காணலாம். இவ்வாறே ஏறலால் ஏறமற்றில்லையே என அம்மையார் கூறிய வாய்மொழியை ஏறலால் ஏறலில்லை எனத் திரு நாவுக்கரசடிகள் பொன்னே போல் எடுத்தாளுதல் காணலாம்,

  • உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற் செவ்வான்

. தொடைமேல் இரைக்கின்ற பாம்பின என்றும் தொடேல்"