பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

பன்னிரு திருமுறை வரலாறு


எனக் காரைக் காலம்மையார் இறைவனை (57ಹನಿಹಿ கூறும் அறிவிப்பு, அன்பிற் சிறந்த தாய் தன் குழந்தைக்கு இடர் நேசா வண்ணம் விரைந்து கூறும் அறிவுரையை நினைவு படுத்துவதாகும்.

இறைவனருளால் வானமு மண்ணுமெல்லாம் ஆணங்கு பேய் வடிவம் பெற்ற அம்மையார், முதன்முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்புடைய பிரபந்தம் அற்புதத் திருவத் தாதி யென்பதாகும். அற்புதம் என்பது ஈண்டு யாவர ாலுடி வியந்து போற்றுதற்குரிய சிவஞானம் என்ற பொருளைத் தருவதாகும். அற்புத மூர்த்தி' என்னும் நன்னூற் சிறப்புப் பாயிரத்தொடர்க்கு ஞானமே திருமேனியாத வுடையான் ' எனச் சங்கர நமச்சிவாயர் கூறும் பொருள் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். ' இறைவனருளால் தம் உள்ளத்துத் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப் பாட்டினல் உமையொரு கூறளுகிய இறைவனைப் பாடிப் போற்றிய அந்தாதியாதலின் இஃது அற்புதத் திருவந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று. இந்நுட்பம்.

உற்ப வித்தெழுந்த ஞானத் தொருமையின் உமை

கோன்றன்னை

அற்புதத் திருவந்தாதி அப்பொழு தருளிச் செய்வார் ே

எனவரும் சேக்கிழார் வாய்மொழியால் இனிது புலகுைம்.

தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய பேராசிரியரும் நச்சினுர்க்கினியரும் தொல்காப்பியர் கூறிய எண் வகை வனப்புக்களுளொன்ருகிய விருந்தென்பதற்குப் பொய்கை யார் முதலாயிஞர் செய்த அந்தாதிச் செய்யுளை ' உதாரண மாகக் குறிப்பிட்டுள்ளார்கள். காரைக் காலம்மையார் பாடிய இவ்வற்புதத் திருவந்தாதி விருந்தென்னும் வனப் புக்குரிய சிறந்த இலக்கியமாகும். சங்கத்தொகை நூல்களு ளொன் ருகிய பதிற்றுப் பத்திற் காப்பியாற்றுக் காப்பியஞர் பாடிய நான்காம்பத்து அந்தாதித் தொடையமையப் பாடப் பெற்றதாகும். எனினும் இப்பத்தின் இறுதிச் செய்யுளின் இறுதியடி முதற் செய்யுளின் முதலடியுடன் மண்டலித்து முடியவில்லை. அந்தாதித் தொடையமைய நூற்ருெரு வெண்பாக்களால் இறுதியும் முதலும் மண்டலித்து முடியக்

1. நன்னூற் சிறப்புப் பாயிரம், சங்கர நமச்சிவாயர் உரை. 2. பெரிய தாரைக் காலம்மையார் புராணம் 52-ம் செய்யுள்.