பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

பன்னிரு திருமுறை வரலாறு


பருகியும் அவன் திருவடிகளை என் கைகளாற் பலமுறை தொழுதும் அப்பெருமானது திருவருட்டிறத்தை நெஞ்சங் குளிர நினைந்தும், விண்ணகத்தில் விளங்குபவனே எரியி னில் ஆடல் புரிபவனே என அப்பெருமானுடைய திருநாமங்களை என் நாவினுற் பலமுறை சொல்லியும் இன் புறுவேன் அல்லவா? என இவ்வாறு காரைக்காலம்மை டார் தாம் பெற்ற சிவா நுபவப் பயனை வெளியிட்டுரைக்கும். பகுதிகள் படிப்போருள்ளத்தை நெகிழ்வித்து இறைவன் திருவருளில் திளைத்தின்புறச் செய்வனவாம்.

நெஞ்சமே, நாம் இறைவன் திருவடிகளை இடை யீடின்றி நினைக்கப் பெற்ருேமாதலின் மீளாப், பிறவிக் கடலை நீந்தி உய்ந்தோமாயிளுேம். நெஞ்சே மக்கட் பிறப்பினருள் ஒருவர்க்குரிய மனமாக நீ விளங்குகின்ருய், ஆதலால் ஏனை அஃறிணை யுயிர்களின் நெஞ்சம் போலன்றிப் பெரிய பாதுகாவலைப் பெற்றுள்ளாய். இவ் வுயர்நிலை நினக்குக் கிடைத்தது கருதி மகிழ்வாயாக. எவருடைய எலும்பானுலும் அவற்றை அன்போடியைதற்கு வந்த சாதனமாகக் கருதித் தம் திருமேனியில் அணிந்து ஆடல் புரிவாராகிய சிவபெருமானுக்குத் தொண்டு செய் தற்குரிய பேரன்பினையே மேன்மேலும் பெருக்கிக் கொள் வாயாக. உமையொரு பாகளுகிய இறைவனுடைய திருவடிகளைச் சிந்தித்துப் போற்றும் செல்வ வாழ்வினை அவனது திருவருள் நெறியாற் பெறுவதல்லது நினது முயற்சியாற் பெறுதல் இயலாது. கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதற் பெருமானது திருவடித் தாமரையை எஞ்ஞான் றும் நினைந்து ஓதிப் போற்றுவாயாயின் நீ கருதியவாறெல் லாம் திருத்தமாகச் செய்து பயன்பெற முடியும்.'

எளியேனை ஆளாகவுடையவனும் தனக்குவமையில் லாத தனி முதற் பொருளாய் விளங்குபவனும் தன் பெருமை தானறியாத் தன்மையனும் பொன்னுற் சுருள் படச் செய்தமைத்தது போன்று திகழும் செஞ்சடையுடன் அருளுருவாகிய உமை நங்கையை இடப் பாகத்திற் கொண்டு விளங்கும் சிவபெருமாளுவன். அவனே வானேர் தலைவன். பவளம் போன்று சிவந்து தோன்றும்

منقسمہ

1. அற்புதத் திருவந்தாதி 18. 2. டிை 81. 3, டிே 47. &. ഒു. 78.