பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் 器器剑

திருமேனியையும் நீலமணி போலும் மிடற்றினையும் உடைய பெருமான் அவனே. நீ அவன்பால் மெய்யன் புடையையா யிருப்பாயாக. உலகியலிற் செல்லும் தினை வினைத் தடுத்து அடியாரது புகழ்த்திறத்தை நினைந்து போற்றி வாயிலுைம் மகிழ்ந்து ஏத்தி இறைவனுக்காட் பட்ட தொண்டர் திருவடிகளைக் குறிக்கொண்டு தொழுவா யாக. யாவராலும் மனத் தாற் சிந்தித்துணர முடியாத பிறைமுடிக் கண்ணிப் பெரியோளுகிய இறைவனது பொருள்சேர் புகழை ஒரு சிறிதும் நினையாத தீயோரது கூட்டத்தை விட்டு விலகி உய்வாயாக. என இவ்வாறு அம்மையார் தம் நெஞ்சத்தை நோக்கிக் கூறும் அறிவுரைப் பகுதிகள் உளங்கொண்டு போற்றத்தக்கனவாகும்.

முக்கட் பகவனகிய இறைவனுடைய வீட்டின்பம் வழங்கும் நலம் பொருந்திய திருவடி கணேத் தலைக்கு அணி யாகக் கொண்டமையால் எம்முயிரைக் கொள்ளவரும் கூற்றுவனைப் பொருளாக எண்ணி நடுங்க மாட்டோம். இவ்வுலகிற் சிவனடியார்களைக் கண்டாற் சிவனெனவே தெளிந்து தலைதாழ்த் து வணங்கும் திருத்தொண்டின் நெறியினை மேற்கொள்ளப் பெற்ருேம். இனி எமக்கு எத்தகைய அவலமுமில்லை. திரிபுரத்தவுனர் அவிந்தழியத் தீயம்பு எய்த இறைவனுடைய திருவடித் தாமரைகளைச் சார்ந்தமையால் காலனையும் வென்ருேம். கடிய நரகத் துயரை விட்டு நீங்கினுேம், பிறவிக்கு வித்தாய்த் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருத்தும் நல்வினை தீவினைகளா கிய இரு வினைகளையும் வேரறக் களைந்தோம். செஞ்சடை யீசன் திருவடிக்கே ஆட்பட்டு அவனது இயல்புரைக்கும் நூல்களைக் கற்று இறைவனது அருள் நலங்களை யுணரப் பெற்ருேம். இவ்வுலக வாழ்விற்கும் இனிவரும் மறுமை வாழ் விற்கும் வேண்டிய எல்லா நலங்களும் அமையப் பெற்றுள்ளோம். எங்களைப் புறங்கூறி யிகழ்தற்குக் காரண மாகிய எத்தகைய குற்றமும் எம்பால் இல்லை. எல்லா வுலகங்களையுந் தோற்றுவித்துக் காத்து முடிவில் ஒடுக்குத லால் அரன் என்னுந் திருநாமமுடைய இறைவனை அன் பாகிய போர்வையினலே போர்த்து அவனது மெய்ப் புகழைக் கற்று வல்லோம் என்ற உரிமை காரணமாக அவனைப் பிறரறியாதவாறு நம்முடைய நெஞ்சினுள்ளேயே அடைத்து மறைத்து விட்டோம். இனி அப்பெருமானைக்